சௌக்கிட்
சௌக்கிட் (Chow Kit) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள துணை மாவட்டம். இது சௌக்கிட் சாலையில் இருக்கிறது. சௌக்கிட் சாலையின் இரு புறமும் ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் என இரு சாலைகள் இணையாகச் செல்கின்றன.
சௌக்கிட் Chow Kit 秋杰 | |
---|---|
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
நகரத் தோற்றம் | 1857 |
மாநகரத் தகுதி | 1. பெப்ரவரி 1972 |
அரசு | |
• கோலாலம்பூர் மாநகர மேயர் | அகமட் புவாட் இஸ்மாயில் |
• அடர்த்தி | 6,696/km2 (17,340/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 5xxxx |
தொலைபேசி எண்கள் | +60 |
இணையதளம் | http://www.dbkl.gov.my |
முன்பு காலத்தில் சௌக்கிட் பகுதியில் லோக் சௌக்கிட் எனும் ஈயத் தொழில் செல்வந்தர் இருந்தார். அவர் நகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் பல தார்மீகப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள் செய்தார். அவரின் நினைவாக அப்பகுதிக்கு சௌக்கிட் என்று பெயர் வந்தது.[1]
1960ஆம் ஆண்டுகளில் சைக்கிட் பகுதிகள் சீனர்களின் கோட்டையாக விளங்கின. 2000 ஆம் ஆண்டுகளில் மாற்றம் கண்டது. இப்போது இந்தோனேசியர்களின் சொர்க்கபுரியாக மாறி விட்டது. இங்கு இப்பொது அதிகமான மலாய்க்காரர்களும் சந்தை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். சௌக்கிட் அருகில் கம்போங் பாரு எனும் மலாய்க் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு மலாய்க்காரர்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
பொது
தொகுசௌக்கிட் பசார் எனும் சந்தையில் காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள் போன்றவை விறகப்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சௌக்கிட் பசாருக்கு வருகை புரிவது வாடிக்கையாகி விட்டது.
இங்குள்ள இரவுச் சந்தையும் மிகப் பிரபலமானது. 2003-ஆம் ஆண்டு இங்கு ஒற்றைத் தண்டவாள நிலையம் (Monorail) கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கானோர் இந்த ஒற்றைத் தண்டவாளச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.