பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்கள் (மலாய்:Residen British di Perak; ஆங்கிலம்:British Residents of Malay State of Perak) என்பது 1874-ஆம் ஆண்டில் இருந்து 1951-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பிரித்தானிய முதல்வர்களாகப் பதவி வகித்தவர்களைக் குறிப்பிடுவதாகும்.

பிரித்தானிய முதல்வர் (British Resident) பதவி ஒரு நிர்வாகப் பதவியாக இருந்தது. 1974 பங்கோர் உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, மலாய் பழக்கவழக்கங்கள் மற்றும் மதத்தைத் தவிர, பேராக் மாநில நிர்வாகத்தில் உள்ள அனைத்துச் செயல்பாடுகளுக்கும்; பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (British Residents of Perak) பொறுப்பு வகித்தார். அத்துடன் பேராக் சுல்தானின் ஆலோசகராகவும் சேவை செய்தார்.

பொது

தொகு

அப்போதைய பிரித்தானிய ரெசிடென்ட் (British Resident) பதவி என்பது இன்றைய மந்திரி பெசார் பதவிக்கு இணையானதாகும். அவர் பேராக் மாநில நிர்வாக மன்றத்தின் தலைவராக இருந்தார்; அதே வேளையில் பேராக் மாநிலத்தின் சுல்தான்; பேராக் மாநிலப் பேரவையின் தலைவராக இருந்தார். பிரித்தானிய முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் தைப்பிங் முதல்வர் குன்றில் (Residency Hill) இருந்தது. மற்ற இல்லங்கள் கோலாகங்சார் மற்றும் ஈப்போவில் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரித்தானிய முதல்வர் பதவி என்பது பிரித்தானிய ஆலோசகர் பதவி (British Adviser) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியில், மலாயா சுதந்திரம் அடைந்ததும், பிரித்தானிய ஆலோசகர் பதவி நீக்கப்பட்டது.

பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்களின் பட்டியல் (1874 –1951)

தொகு
பிரித்தானிய முதல்வர் தோற்றம் பதவியேற்பு பதவி முடிவு
1. ஜேம்ஸ் பர்ச்
(James W.W. Birch)
  4 நவம்பர் 1874 2 நவம்பர் 1875
2. சர் பிராங்க் சுவெட்டன்காம்
(Sir Frank Swettenham)
  5 நவம்பர் 1875 மார்ச் 1876
3. ஜேம்ஸ் கத்திரி டேவிட்சன்
(James Guthrie Davidson)
  11 ஏப்ரல் 1876 31 மார்ச் 1877
4. இயூ லோ
(Sir Hugh Low)
  1 ஏப்ரல் 1877 31 மே 1889
5. சர் பிராங்க் சுவெட்டன்காம்
(Sir Frank Swettenham)
  சூன் 1, 1889 30 சூன் 1896
6. சர் வில்லியம் திரிச்சர்
(Sir William Hood Treacher)
  1 சூலை 1896 12 டிசம்பர் 1901
7. சர் ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர்
(Sir John Pickersgill Rodger)
  13 டிசம்பர் 1901 9 பிப்ரவரி 1904
8. சர் எர்னஸ்ட் உட்போர்ட் பர்ச்
(Sir Ernest Woodford Birch)
  10 பிப்ரவரி 1904 5 மார்ச் 1911
9. சர் என்றி கான்வே பெல்பீல்ட்
(Sir Henry Conway Belfield)
  6 மார்ச் 1911 15 டிசம்பர் 1911
10. ஆலிவர் மார்க்ஸ்
(Oliver Marks)
  15 டிசம்பர் 1911 9 ஆகஸ்டு 1912
11. வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம்
(William James Parke Hume)
  9 ஆகஸ்டு 1912 12 ஆகஸ்டு 1912
12. சர் ரெஜினோல்ட் ஜார்ஜ் வாட்சன்
(Sir Reginald George Watson)
  12 ஆகஸ்டு 1912 17 செப்டம்பர் 1919
13. சர் வில்லியம் ஜார்ஜ் மெக்சுவெல்
(Sir William George Maxwell)
  17 செப்டம்பர் 1919 12 செப்டம்பர் 1920
14. வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம்
(William James Parke Hume)
  29 சூன் 1920 13 சூலை 1921
15. சர் சிசில் வில்லியம் சேசு பார்
(Sir Cecil William Chase Parr)
  14 சூலை 1921 20 டிசம்பர் 1925
16. ஓசுவால்ட் பிரான்சிஸ் ஜெரார்ட் சுடோனர்
(Oswald Francis Gerard Stonor)
  20 டிசம்பர் 1925 6 சூன் 1927
17. என்றி வாக்சுடாப் தாம்சன்
(Henry Wagstaffe Thompson)
  6 சூன் 1927 1929
18. சார்லஸ் வால்டர் எமில்டன் காக்ரேன்
(Charles Walter Hamilton Cochrane)
  1929 1930
19. பெர்ட்ராம் வால்டர் எல்லெசு
(Bertram Walter Elles)
  1931 1932
20. சர் செப்ரி எட்மண்ட் கேட்டர்
(Sir Geoffrey Edmund Cator)
  1933 1939
21. மார்கஸ் ரெக்ஸ்
(Marcus Rex)
  1939 1941
22. ஆர்தர் வின்சென்ட் ஆசுடன்
(Arthur Vincent Aston)
  1946 1948
23. ஜேம்ஸ் இன்னசு மில்லர்
(James Innes Miller)
  1948 1951
24. எட்வின் சிரில் கெடெஸ் பாரெட்
(Edwin Cyril Geddes Barrett)
  1953 1954
25. டத்தோ இயன் பிளெலோக்
(Dato’ Ian Blelloch)
  1951 1956

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு