ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம்
ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆரா டாமன்சாரா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Ara Damansara LRT Station; மலாய்: Stesen LRT Ara Damansara; சீனம்: 阿拉白沙罗) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]
ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் (2016) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Ara Damansara (மலாய்) 阿拉白沙罗 (சீனம்) | ||||||||||
அமைவிடம் | சுபாங் வானூர்தி நிலையச் சாலை PJU 1A சாலை ஆரா டாமன்சாரா 47301 பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′30.1″N 101°35′11.3″E / 3.108361°N 101.586472°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல்; பெட்டாலிங் ஜெயா இலவசப் பேருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | (817) கட்டணம் | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ26 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது.[4]
அமைவு
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
ஆரா டாமன்சாரா பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், ஆரா டாமன்சாரா எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
காத்திருக்கும் நேரம்
தொகுPJU 1A/46 சாலை; PJU 1A சாலை, ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
ஆரா டாமன்சாரா
தொகுஆரா டாமன்சாரா (Ara Damansara); என்பது சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது.
துரோபிக்கானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது.
தாமான் துன் டாக்டர் இசுமாயில்
தொகுபெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில்; புஞ்சாக் ஆலாம் நெடுஞ்சாலைக்கு (Puncak Alam Highway) கிழக்கிலும்; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் (New Klang Valley Expressway - NKVE) வடக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara), கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன.
சுபாங் வானூர்தி நிலையம்
தொகுலெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது.[5] சுபாங் ஜெயா, கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன.
இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆசிய நெடுஞ்சாலை
தொகுஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை ; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலை மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
ஆரா டாமன்சாரா இரண்டு எல்ஆர்டி (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது.
- KJ24 லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் (Lembah Subang LRT Station)
- KJ26 ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் (Ara Damansara LRT Station)
2016 சூன் மாதம் கிளானா ஜெயா வழித்தடம் (LRT Kelana Jaya Line) கட்டி முடிக்கப்பட்டது.
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Ara Damansara LRT Station serving Taman Mayang Emas neighborhoods". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Ara Damansara LRT Station is a Light Rapid Transit station at Ara Damansara that is served by Rapid KL's Kelana Jaya Line. Like most other LRT stations operating in the Klang Valley, this Station is elevated". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Pekan Subang Shah Alam, Selangor". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Ara Damansara LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Ara Damansara LRT station