லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம்
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் அல்லது லெம்பா சுபாங் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Lembah Subang LRT Station; மலாய்: Stesen LRT Lembah Subang; சீனம்: 梳邦谷) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் (2017) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Lembah Subang (மலாய்) 梳邦谷 (சீனம்) | ||||||||||
அமைவிடம் | PJU 1A/46 சாலை; PJU 1A சாலை ஆரா டாமன்சாரா 47301 பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′44″N 101°35′28″E / 3.1121°N 101.5912°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 பக்க மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல்; பெட்டாலிங் ஜெயா இலவசப் பேருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | கட்டணம் (482) மாநகராட்சி | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | (20) | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ25 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது.[3]
அமைவு
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
லெம்பா சுபாங் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், சுபாங் எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
காத்திருக்கும் நேரம்
தொகுPJU 1A/46 சாலை; PJU 1A சாலை, ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கு
தொகுலெம்பா சுபாங் நிலையம், லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கிற்கு அருகில் உள்ளது. இந்தப் பராமரிப்புக் கிடங்கு கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்யும் ஒரே நிலையக் கிடங்கு ஆகும்.
லெம்பா சுபாங் என்பது சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் இந்த நகரம், சா ஆலாம், சுபாங் ஜெயா பெருநகரங்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.[4]
சுபாங் வானூர்தி நிலையம்
தொகுலெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது.[5] சுபாங் ஜெயா, கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன.
இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது.
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[6]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும்.
இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
பேருந்து சேவைகள்
தொகுபெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
பேருந்து | தொடக்கம் | பயண வழி | இலக்கு |
---|---|---|---|
T782 | KJ25 லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் | PJU 1A/1 சாலை | ஆரா டாமன்சாரா |
T807 | SBK07 சூரியன் நிலையம் | PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா KJ25 லெம்பா சுபாங் நிலையம் |
ஆரா டாமன்சாரா |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "The Lembah Subang LRT Station is a station in Subang that is served by Rapid KL's Kelana Jaya Line. This Station is located near the Lembah Subang Depot". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Subang". www.durianproperty.com.my. DurianProperty.com.my. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
- ↑ "Pekan Subang Shah Alam, Selangor". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Lembah Subang LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Lembah Subang LRT station