கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம்
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kelana Jaya LRT Station; மலாய்: Stesen LRT Kelana Jaya; சீனம்: 格拉那再也站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Kelana Jaya (மலாய்) 幸福花园 (சீனம்) | ||||||||||
அமைவிடம் | 1108 - 1109 சந்திப்புகள் டாமன்சாரா-பூச்சோங் கிளானா ஜெயா சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′45″N 101°36′14″E / 3.11250°N 101.60389°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 பக்க மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல்; பெட்டாலிங் ஜெயா இலவசப் பேருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | கட்டணம் (482) மாநகராட்சி | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | (20) | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ24 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 செப்டம்பர் 1998 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் பயணிகள் சேவைகளுக்கான முன்னாள் மேற்கு முனையமாக இருந்தது. பின்னர் 1995-ஆம் ஆண்டு, கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க நிலையமாக அமைந்தது.
அமைவு
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
கிளானா ஜெயா மாநகர்ப் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், மாநகரின் பெயரும் இதற்குச் சூட்டப்பட்டது.
இந்த நிலையம், 1108 மற்றும் 1109 சாலைச் சந்திப்புகளுக்கு இடையில்; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில், 1995 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. பாதசாரிகள் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையைக் கடக்க ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டு உள்ளது.
பெட்டாலிங் ஜெயா உத்தாரா
தொகுபெட்டாலிங் ஜெயா SS2, கிளானா ஜெயாவின் SS4; SS5; தாமான் மாயாங் SS25 ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.[3]
ஒரு பெரிய அதிவேக விரைவுச்சாலைக்கு அருகில் இந்த நிலையம் இருப்பதால், பெட்டாலிங் ஜெயா உத்தாரா (PJ Utara - PJU) எனும் வடக்கு பெட்டாலிங் ஜெயா, திராப்பிகானா, சுபாங் ஜெயா, சன்வே மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளுக்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் பேருந்து இணைப்புகளால் இந்த நிலையம் நன்கு சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம், உள்ளூர் வாடகை வாகனங்களின் நிறுத்த மையமாகவும் செயல்படுகிறது.
கிளானா ஜெயா பேருந்து நிறுத்தம்
தொகுகிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம், பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; கோலாலம்பூருக்கான விரைவுப் பேருந்து மையமாகவும் உள்ளது. இந்த நோக்கத்திற்காக, வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக கோலாலம்பூர் கிள்ளான் விரைவுச்சாலைக்கு எதிரே ஒரு பெரிய பேருந்து நிறுத்தமும் கட்டப்பட்டு உள்ளது.
இந்தப் பேருந்து நிறுத்தம் ஒரு பாதசாரி மேம்பாலம் மூலமாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிலையத்திலிருந்து தெற்குப் பாதையில் புறப்படுகின்றன. ஆனால் பல பேருந்துகள் தங்கள் பயணிகளை பேருந்து நிறுத்தத்திலயே இறக்கிவிடுகின்றன.
ஏனெனில் இந்தச் செயல்பாடு, பேருந்து முனையத்தில் நெரிசலைத் தவிர்க்கிறது. அத்துடன் இந்த நிலையம் பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்திற்கும் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது.
கிளானா ஜெயா வழித்தட வரைபடம்
தொகுநிலைய தள அமைப்பு
தொகுL2 - இரண்டாவது மாடி | மாற்றுவழி | மேம்பாலம் (→) பேருந்து நிலையம், வாடகை வாகனங்கள், சன்வே சுங்கைவே SS25), கடைகள் |
L2 - இரண்டாவது மாடி | மேடை1 | கிளானா ஜெயா (→) KJ1 கோம்பாக் (→) |
தீவு மேடையின் கதவுகள் வலதுபுறத்தில் திறக்கப்படும் | ||
மேடை 2 | கிளானா ஜெயா (→) KJ37 புத்ரா அயிட்ஸ் (←) | |
L1 - முதலாவது மாடி | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் | |
G - தெருநிலை | சாலைவழி | பேருந்து முனையம் (→) வாடகை வாகனங்கள் முனையம், கடைகள் |
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[4]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும்.
இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
அமைப்பு
தொகுதொடருந்துகள் பயணிக்கும் தடத்தில் உள்ள பெரிய கூரைகள் பாரம்பரிய மலாய்ப் பண்பாட்டுக் கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டது. கிளானா ஜெயாயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என மூன்று நிலைகள் உள்ளன.
இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும், பாதசாரிகள் நடைபாதைகளுக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும்; மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன.
பேருந்து சேவைகள்
தொகுபெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
பேருந்து | தொடக்கம் | பயண வழி | இலக்கு |
---|---|---|---|
T780 | KJ24 கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் | டாமன்சாரா-பூச்சோங் | தாமான் மாயாங் இமாஸ் / முத்தியாரா துரோப்பிக்கானா |
T781 | KJ24 கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் | டாமன்சாரா-பூச்சோங் | கிளானா ஜெயா நகர மையம் |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Kelana Jaya (KJ24) LRT station" (Map). Google Maps. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kelana Jaya LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kelana Jaya LRT Station