கிளன்மேரி எல்ஆர்டி நிலையம்
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் அல்லது கிளன்மேரி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Glenmarie LRT Station அல்லது CGC-Glenmarie LRT Station; மலாய்: Stesen LRT Glenmarie; சீனம்: 格林瑪麗站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா, சுபாங், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||
பொது தகவல்கள் | |||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Ara Damansara (மலாய்) 格林瑪麗站 (சீனம்) | ||||||
அமைவிடம் | சுபாங் வானூர்தி நிலையச் சாலை கிளன்மேரி, செக்சன் U1 40150 சா ஆலாம் சிலாங்கூர் மலேசியா | ||||||
ஆள்கூறுகள் | 3°05′45″N 101°35′26″E / 3.0958°N 101.5905°E | ||||||
உரிமம் | பிரசரானா | ||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||
தடங்கள் | கிளானா ஜெயா சா ஆலாம் வழித்தடம் (திறப்பு: 2025) | ||||||
நடைமேடை | 1 தீவு மேடை | ||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் | ||||||
கட்டமைப்பு | |||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||
தரிப்பிடம் | (569) கட்டணம் | ||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலையக் குறியீடு | KJ27 SA07 | ||||||
வரலாறு | |||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | ||||||
திறந்தது | ஆகத்து 2025 (சா ஆலாம் வழித்தடம்) | ||||||
சேவைகள் | |||||||
|
இந்த நிலையம் தற்போது சா ஆலாம் வழித்தடத்திற்காக கட்டுமானத்தில் உள்ளது. கட்டுமானம் நிறைவடைந்த பின்னர் இந்த நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகச் செயல்படும்; மற்றும் 2025-இல் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[3][4]
அமைவு
தொகுகிளன்மேரி எனும் பெயரை இந்த எல்ஆர்டி நிலையம் பகிர்ந்து கொண்டாலும், கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் வழித்தடத்தின் விரிவாக்கத்தில் உள்ள கிளன்மேரி கொமுட்டர் நிலையத்துடன் ஒரு பரிமாற்ற நிலையமாக இணைந்து செயல்படாது. கிளன்மேரி தொழில் பூங்காவிற்கு அருகில் ஏறக்குறைய 2.6 கிமீ தொலைவில் கிளன்மேரி கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது.
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம், SS7 சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில், கிளானா ஜெயாவின் அருகில் அமைந்துள்ளது.
கிளன்மேரி
தொகுSS7 சாலை, கிளன்மேரி ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
சுபாங் வானூர்தி நிலையம்
தொகுசுபாங் ஜெயா, கிளானா ஜெயா, சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், கிளன்மேரி நகரத்திற்கு அருகில் உள்ளன.
கிளன்மேரி நகரத்திற்கு அருகில் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது.
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "CGC – Glenmarie LRT Station Officially Launched | Credit Guarantee Corporation – Powering Malaysian SMEs®". Archived from the original on 10 July 2021. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
- ↑ "CGC launches CGC-Glenmarie LRT station". Archived from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Glenmarie LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Glenmarie LRT station