சுபாங் ஜெயா நிலையம்

பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே கொமுட்டர் தொடருந்து நிலையம்

சுபாங் ஜெயா நிலையம் (ஆங்கிலம்: Subang Jaya Station; மலாய்: Stesen Subang Jaya); சீனம்: 梳邦再也) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.

 KD09   KS02   KJ28 
சுபாங் ஜெயா
Subang Jaya Station
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர் Rapid_KL_Logo
சுபாங் ஜெயா நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen Subang Jaya (மலாய்)
梳邦再也 (சீனம்)
அமைவிடம்SS16/1, SS16 47500 சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°05′05″N 101°35′17″E / 3.08472°N 101.58806°E / 3.08472; 101.58806
உரிமம் மலாயா தொடருந்து
பிரசரானா மலேசியா
தடங்கள்  தஞ்சோங் மாலிம்–கிள்ளான் 
 கிளானா ஜெயா 
 இஸ்கைபார்க் 
நடைமேடை2 பக்க நடைமேடை (KTM); 1 தீவு மேடை(LRT)
இருப்புப் பாதைகள்2 (LRT); 4 (KTM)
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
இணைப்புக்கள் KD08 ;  SB1 
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை KD09   KS02  நிலத்தடி
 KJ28  உயர்மட்ட நிலை
தரிப்பிடம்Parking இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD09   KS02   KJ28 
வரலாறு
திறக்கப்பட்டது14 ஆகத்து 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-08-14) (கிள்ளான் துறைமுக வழித்தடம்)
30 சூன் 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-06-30) (LRT)
1 மே 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-05-01) (Skypark Link)
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
முந்தைய பெயர்கள்சுங்கைவே
சேவைகள்
முந்தைய நிலையம்   சுபாங் ஜெயா   அடுத்த நிலையம்
செத்தியா ஜெயா
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
பத்து தீகா
கிள்ளான் துறைமுகம்
கோலாலம்பூர் சென்ட்ரல் (தொடக்கம்)
 
இஸ்கைபார்க்
 
இஸ்கைபார்க்
(முடிவு)
கிளன்மேரி
கோம்பாக்
 
கிளானா ஜெயா
 
எஸ்எஸ்15
புத்ரா அயிட்ஸ்
அமைவிடம்
Map
சுபாங் ஜெயா நிலையம்

சுபாங் ஜெயா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் சுபாங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது.

இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் (KTM Komuter Port Klang Line); கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் (KL Sentral-Terminal Skypark Line) மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் (LRT Kelana Jaya Line) ஆகியவற்றால் சேவை செய்யப்படுகிறது.

பொது

தொகு

இந்த நிலையம் ஒரு பிரபலமான தொடருந்து மற்றும் பேருந்து மையமாகும். சுபாங் ஜெயா செகி கல்லூரி, டெய்லர் பல்கலைக்கழகம், மோனாஷ் பல்கலைக்கழகம்,இந்தி கல்லூரி, மலேசிய KDU பல்கலைக்கழகக் கல்லூரி, சன்வே பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

இந்த நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரலுக்குச் செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். அத்துடன் இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது.

கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் வழித்தடம் இந்த நிலையத்தின் வழியாக, இதே நிலையத்தையும் கடந்து செல்கிறது. செத்தியா ஜெயா நிலையத்தில் நிற்காத இஸ்கைபார்க் வழித்தட தொடருந்துகள் (Skypark Link) இந்த நிலையத்தில்]] (Subang Jaya Station) நின்று செல்கின்றன.[2]

கிளானா ஜெயா வழித்தடம்

தொகு

கிளானா ஜெயா வழித்தடம் அல்லது 'கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[3]

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.[4]

இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[5][6]

புத்ரா எல்ஆர்டி

தொகு

முன்பு இந்த வழித்தடம் புத்ரா எல்ஆர்டி (PUTRA LRT) என அழைக்கப்பட்டது. இது ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக, பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்திற்கு அதன் முன்னாள் முனையமான கிளானா ஜெயா நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 5; வழித்தடத்தின் நிறம் சிகப்புக்கல் என பொறிக்கப்பட்டு உள்ளது.

15 பிப்ரவரி 1994-இல் கிளானா ஜெயா வழித்தடத்தின் கட்டுமானம் தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்து இறுதி வரையிலான முழுப் பயணத்திற்கும் மொத்தம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பிடிக்கும்; மற்றும் இந்தப் பயணம் 37 நிலையங்களை உள்ளடக்கியது.[3]

மேலும் காண்க

தொகு

சுபாங் ஜெயா நிலையத்த்தின் அமைப்பைப் போன்ற மற்ற நிலையங்கள்:

சுபாங் ஜெயா நிலையத்த்தின் செயல்பாட்டைப் போன்ற மற்ற நிலையங்கள்:

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Syazana, Syarifah (28 June 2016). "All new stations on the Kelana Jaya and Ampang Line will open on June 30". Timeout.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  2. EdgeProp.my (27 March 2018). "KL Sentral-Subang Skypark rail service starts early May". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 1 April 2018.
  3. 3.0 3.1 "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  4. Brenda Ch'ng; Jasmin Ho (29 June 2016). "New riders aboard". The Star. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  5. Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/. 
  6. "Projek Landasan Keretapi dari Subang ke Terminal Skypark Subang" [Railway Project from Subang to Subang Skypark Terminal]. Land Public Transport Commission of Malaysia.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாங்_ஜெயா_நிலையம்&oldid=4144580" இலிருந்து மீள்விக்கப்பட்டது