செத்தியா ஜெயா நிலையம்

பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம்

செத்தியா ஜெயா நிலையம் (ஆங்கிலம்: Setia Jaya Station; மலாய்: Stesen Setia Jaya); சீனம்: 双威-斯迪亚再也) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்; மற்றும் சன்வே விரைவுப் பேருந்து நிலையம் ஆகும்.[1]

 KD08   SB1 
செத்தியா ஜெயா
சன்வே-செத்தியா ஜெயா
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
Rapid_KL_Logo
செத்தியா ஜெயா நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Setia Jaya Station; Sunway-Setia Jaya
அமைவிடம்பண்டார் சன்வே, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°05′04″N 101°37′19″E / 3.0845°N 101.6219°E / 3.0845; 101.6219
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்   தஞ்சோங் மாலிம்–கிள்ளான்  
சன்வே விரைவுப் பேருந்து
நடைமேடை1 பக்க நடைமேடை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
இணைப்புக்கள் KD08 ;  SB1 
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை KD08  தரைநிலை
 SB1  உயர்மட்ட நிலை
தரிப்பிடம்Parking இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD07 
வரலாறு
திறக்கப்பட்டதுஆகத்து 14, 1995 (1995-08-14) (கொமுட்டர்)
மே 2, 2015 (2015-05-02) (பேருந்து)
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
முந்தைய பெயர்கள்சுங்கைவே
சேவைகள்
முந்தைய நிலையம்   பண்டார் சன்வே   அடுத்த நிலையம்
செரி செத்தியா
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
சுபாங் ஜெயா
கிள்ளான் துறைமுகம்
மெந்தாரி பேருந்து
யுஎஸ்ஜே 7
 
சன்வே பேருந்து
 
(தொடக்கம்)
அமைவிடம்
Map
செத்தியா ஜெயா நிலையம்

செரி செத்தியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் சன்வே குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது.[2]

பொது

தொகு

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; பெட்டாலிங் ஜெயா, சன்வே குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம்   பந்தாய் புதிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

கேஎல் சென்ட்ரல்-தெர்மினல் இஸ்கைபார்க் (KL Sentral-Terminal Skypark Line) வழித்தடம் இந்த நிலையத்தின் வழியாக, இதே நிலையத்தையும் கடந்து செல்கிறது.

இருப்பினும் இந்த நிலையத்தில் கொமுட்டர் தொடருந்துகள் நிற்பது இல்லை. அதற்கு பதிலாக இஸ்கைபார்க் தொடருந்துகள் (Skypark Link) அருகிலுள்ள சுபாங் ஜெயா கொமுட்டர் நிலையத்தில் (Subang Jaya Station) நின்று செல்கின்றன.

சுங்கை வே நிலையம்

தொகு

இந்த நிலையம் முன்பு 1980-களில் சுங்கை வே நிலையம் (Sungai Way Station) என்று அழைக்கப்பட்டது.[3] தற்போதைய செரி செத்தியா கிராமம் என்பது அருகிலுள்ள சுங்கைவே கிராமத்திலிருந்து உருவானது.

சுங்கைவேயின் தற்போதைய பெயர் செரி செத்தியா புதுக்கிராமம் (Seri Setia New Village).

இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள செரி செத்தியா கொமுட்டர் நிலையத்தில் இருந்து   மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையின் (Federal Highway Malaysia) குறுக்கே சுங்கைவே கிராமத்திற்கு இணைப்புப் பாலம் உள்ளது.

தீர்வையற்ற தொழில்துறை மண்டலம்

தொகு

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; மற்றும் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை சந்திப்பில் இந்த நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் தீர்வையற்ற தொழில்துறை மண்டலத்தின் தொழிற்சாலைகள் நடந்து செல்லும் தூரத்தில் இந்த நிலையம் அமைந்து உள்ளது.

செரி செத்தியா நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், சுங்கைவே பகுதியில் வாழும் பயணிகள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சுங்கைவே பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

சுங்கைவே

தொகு

சுங்கைவே (Sungai Way); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள புற நகர்ப் பகுதி. SS8, SS9, SS9A ஆகிய குடியிருப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதன் தற்போதைய பெயர் ஸ்ரீ செத்தியா (Seri Setia).[4]

1959-ஆம் ஆண்டில், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Federal Highway (Malaysia) திறப்பதற்கு முன்பு இங்கு ஒரு புதிய தொழில்துறை மண்டலம் (Sungai Way industrial zone) நிறுவப்பட்டது. அந்த வகையில், பெட்டாலிங் ஜெயா பகுதியில் முதன்முதலில் வளர்ச்சி பெற்ற கிராமம் சுங்கைவே கிராமம் ஆகும்.[5]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Seri Setia KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  2. "Seri Setia KTM Station served by the Port Klang Route of the KTM Komuter service". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  3. "KTM Klang Valley Network, 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
  4. "The new village Nixon visited - The Star Online". www.thestar.com.my.
  5. "Sungai Way New Village - Sungai Way is part of PJ district which was granted city status in 2006". Bike with Elena. 6 March 2017. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செத்தியா_ஜெயா_நிலையம்&oldid=4131396" இலிருந்து மீள்விக்கப்பட்டது