தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அல்லது கிள்ளான் துறைமுக வழித்தடம் (ஆங்கிலம்: Tanjung Malim–Port Klang Line அல்லது Port Klang Line; மலாய்: Laluan Pelabuhan Klang அல்லது Laluan Tanjung Malim–Pelabuhan Klang) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.[1][2]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் வழித்தடம் Port Klang Line | |||
---|---|---|---|
கோலாலம்பூர் சென்ட்ரல் KTM 92 SCS 14 ரக இரயில் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயலில் உள்ளது | ||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வழித்தட எண் | (சிவப்பு) | ||
வட்டாரம் | பேராக் சிலாங்கூர் கோலாலம்பூர் | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 34 நிலையங்கள் | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
அமைப்பு | கேடிஎம் பயணிகள் KTM Komuter | ||
சேவைகள் | தஞ்சோங் மாலிம் — கிள்ளான் துறைமுகம் | ||
பாதை எண் | 1 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
பணிமனை(கள்) | சிரம்பான் | ||
சுழலிருப்பு | 37 தொடருந்துகள் (KTM Class 92 Komuter CSR EMU) | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 14 ஆகத்து 1995 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 126 km (78 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | வார்ப்புரு:25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | ++ 120 km/h (75 mph) | ||
|
இந்த வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. கிள்ளான் துறைமுகம்; தஞ்சோங் மாலிம் ஆகிய இரு நகரங்களையும்; இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 35 தொடருந்து நிலையங்களையும் இந்தச் சேவை இணைக்கின்றது.[3]
பொது
தொகுஇந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் கோலாலம்பூர் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. 15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை பத்துமலை வரை இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
வரலாறு
தொகுகேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) என்பது 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பயணிகள் இரயில் சேவையாகும் (Klang Valley Integrated Transit System). குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பயணிகளுக்குப் பெரிதும் உதவியது.
கோலாலம்பூரில் பணிபுரியும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநகரத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இது ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாக இருந்தது. பெட்டிகள் நவீனமாகவும் மற்றும் குளிரூட்டப் பட்டவையாகவும் இருந்தன.
சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதை
தொகு1886-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்தப் பாதை தொடங்கியது. நவீன கால சிரம்பான் பாதையானது 1895-இல் திறக்கப்பட்டது.[4]
கோலாலம்பூர் - கிள்ளான் இரயில் பாதையில் இருந்து சுல்தான் சாலை நிலையம் வழியாக, 1895-இல் சிரம்பானுக்குத் திறக்கப்பட்டது.[5]
1990-களின் முற்பகுதியில் ரவாங் - சிரம்பான் சேவையும்; செந்தூல் - கிள்ளான் துறைமுகச் சேவையும் மின்மயமாக்கப் பட்டன.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
தொகு- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- CC13 எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
நிலையங்கள்
தொகுதஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களுக்கு இடையில் எந்தெந்த நிலையங்களில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்துகள் நின்று செல்கின்றன எனும் விவரங்கள்:
தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுக வழித்தடம்
தொகுகாட்சியகம்
தொகு-
கோலாலம்பூர் தொடருந்து நிலையம்
-
கோலாலம்பூர் தொடருந்து நிலையம் முன்பகுதி
-
புத்ரா தொடருந்து நிலையம்
-
கோலாலம்பூர் தொடருந்து நிலையம் நடைபாதைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The KTM Komuter has been consistently contributing to the train route map in Malaysia. It was established in 1995 to provide a convenient local rail service throughout Kuala Lumpur and surrounding areas of the Klang Valley". www.ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
- ↑ "Port Klang KTM Komuter Station is the western terminus on the Port Klang Line. The South Port Cruise Ship Terminal, Port Klang Police Station, Poslaju Office and the Port Klang Immigration Centre". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
- ↑ "The KTM Pelabuhan Klang Route runs regular Komuter train services from Port Klang in Selangor to Tanjung Malim in Perak, via the main transport hub in Kuala Lumpur, KL Sentral Station". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
- ↑ "History of Railways in Selangor". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
- ↑ "Old Railway Station ~ Places to Visit in Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.