சா ஆலாம் கொமுட்டர் நிலையம்
சா ஆலாம் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Shah Alam Komuter Station; மலாய்: Stesen Komuter Shah Alam); சீனம்: 峇都知甲) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் சா ஆலாம் செக்சன் 19 பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
சா ஆலாம் Shah Alam | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD11 | |||||||||||
சா ஆலாம் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 峇都知甲 | ||||||||||
அமைவிடம் | செக்சன் 19, 40200, சா ஆலாம், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°03′23″N 101°31′32″E / 3.056389°N 101.525556°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | KD11 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை & 1 தீவு மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
தொடருந்து இயக்குபவர்கள் | மலாயா தொடருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD11 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | ஆகத்து 14, 1995 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 25 kV AC மின்மயமாக்கல் | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
சா ஆலாம் கொமுட்டர் நிலையம் பத்து தீகா - பாடாங் ஜாவா - கிள்ளான் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டப்பட்டது. பத்து தீகா கொமுட்டர் நிலையம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சா ஆலாம் கொமுட்டர் நிலையத்திற்கு சா ஆலாம் நகரத்தின் பெயரில் பெயரிடப்பட்டது.[2]
பொது
தொகுதஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், சா ஆலாம் மாநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்கிறது; மற்றும் இந்த நிலையம் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[3]
சா ஆலாம் கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையத்திற்கு அருகில் பத்து தீகா கொமுட்டர் நிலையம்; பாடாங் ஜாவா நிலையம் ஆகிய நிலையங்கள் உள்ளன. நகர மையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
இந்த நிலையத்தின் வழியாக சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் இலவசப் பேருந்து சேவையும் உள்ளது. இந்த நிலையம் முன்பு 1980-களில் சுங்கை ரெங்கம் நிலையம் என்ற பெயரில் ஒரு சரக்கு நிலையமாக இருந்தது.[4]
சா ஆலாம்
தொகுசா ஆலாம் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள மாநகரம்; சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம். மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1978-இல் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் பிரகடனம் செய்யப்பட்டது. மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் சா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது.[5]
இந்த நகரத்தின் சாலைகள், கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், மக்கள் குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், வணிகத் தளங்கள், மருத்துவ மையங்கள், பொழுது போக்கு மையங்கள் அனைத்துமே திட்டமிடப்பட்டு மிக நவீனமாக, உருவாக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shah Alam KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
- ↑ "Shah Alam KTM Station". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
- ↑ "KTM Shah Alam to KL Sentral". transit-link.com. 22 May 2023. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
- ↑ "KTM Klang Valley Network, 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
- ↑ "Before 1963, Shah Alam was known as Sungai Renggam and was a palm oil plantation which was situated between Petaling Jaya and Bandar Diraja Klang". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.