கிள்ளான் கொமுட்டர் நிலையம்

கிள்ளான் நகரில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

கிள்ளான் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Klang Komuter Station; மலாய்: Stesen Komuter Klang); சீனம்: 巴生) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் நகரில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

கிள்ளான்
Klang
 KD14  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
கிள்ளான் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 巴生
அமைவிடம்கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°02′35″N 101°27′00″E / 3.04306°N 101.45000°E / 3.04306; 101.45000
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD14  தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை1 நடைமேடை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்4
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD14 
வரலாறு
திறக்கப்பட்டது1890
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   கிள்ளான்   அடுத்த நிலையம்
சா ஆலாம்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
தெலுக் பூலாய்
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
கிள்ளான் நிலையம்

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கிள்ளான் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது; மற்றும் கிள்ளான் நகரின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2][3]

பொது

தொகு

இந்த நிலையம் கிள்ளான் நகரின் தெற்கு பகுதியில் உள்ள பெசார் சாலையில் (Jalan Besar) அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு இணையாக தொடருந்து இயந்திரங்கள் மற்றும் சரக்கு வண்டிகளைப் பழுதுபார்ப்பதற்கான கேடிஎம் கிடங்கு (KTM Depot) உள்ளது.

கிள்ளான் நகரின் மையப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கிள்ளான் நிலையம், வாடகை வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளின் மூலம் சேவை செய்யப்படுகிறது. கிள்ளான் கொமுட்டர் நிலையம், கிள்ளான் மத்தியப் பேருந்து மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. முழு கிள்ளான் நகரம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அந்தப் பேருந்து மையம் இணைப்பை வழங்குகிறது.

மேற்கத்திய கட்டிடக்கலை

தொகு

பிரதான நிலைய கட்டிடம் ஒரு சிறிய ஒற்றைக் கூரை கட்டிடமாகும். இந்த நிலையம் முதலில் 1890-இல் கட்டப்பட்டது. பல சீரமைப்புப் பணிகளுக்கு உட்பட்டாலும், நிலையத்தின் மேற்கத்திய காலனித்துவக் கட்டிடக்கலை இன்றும் பேணிக் காக்கப்படுகிறது.

கிள்ளான் நிலையமானது பிரதான நிலையக் கட்டிடத்தின் பக்கவாட்டு நடைபாதை தளத்தையும்; பாதசாரி பாலம் மூலம் எளிதில் சென்று அடையக்கூடிய தீவுத் தளத்தையும் கொண்டுள்ளது.

அண்மையில் கிள்ளான் நிலையம் மேம்படுத்தப்பட்டது, அங்கு அதன் குறுகிய தடங்களுக்குன் பதிலாக அதன் தீவு மேடையில் உயரமான மற்றும் அகலமான கவிகைகள் (Canopy) அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பிரதான நிலைய கட்டிடம் இன்னும் பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை. பழைய நிலையிலேயே உள்ளது. 2019-ஆம் ஆண்டில் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டது.

கிள்ளான்

தொகு

கிள்ளான் நகரம் சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கே உள்ளது.

சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.

கிள்ளான் லிட்டில் இந்தியா

தொகு

ஈய வளங்கள் நிறைந்த கிள்ளான்; கிள்ளான் பள்ளத்தாக்கு; ஆகிய இடங்கள் சிலாங்கூர் வரலாற்றிலும், மலாயா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பிலும் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிள்ளானில் சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் என்றால் “ஆலாம் சா” மாளிகை, “சுல்தான் சுலைமான்” பள்ளிவாசல், தெங்கு சாலை லிட்டில் இந்தியா, கேரித் தீவு மற்றும் ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் ஆலயம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Klang KTM Komuter Station (formerly known as the Klang Railway Station) is located at Jalan Besar, in the southern area of Klang". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
  2. "The Klang station is located close to the central part of Klang town. It is serviced by a dedicated taxi and mini bus service". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
  3. "KTM Komuter introduces limited stops train from KL to Pelabuhan Klang - 14 stations, weekday evenings only - paultan.org". Paul Tan's Automotive News. 14 May 2024. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு