பத்து தீகா கொமுட்டர் நிலையம்

பத்து தீகா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையம்

பத்து தீகா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Tiga Komuter Station; மலாய்: Stesen Komuter Batu Tiga); சீனம்: 峇都知甲) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பத்து தீகா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

பத்து தீகா
Batu Tiga
 KD10  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
பத்து தீகா கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 峇都知甲
அமைவிடம்பத்து தீகா, 40150 சா ஆலாம், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°04′33″N 101°33′36″E / 3.07583°N 101.56000°E / 3.07583; 101.56000
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து போக்குவரத்து இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து SA02
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD10 
வரலாறு
திறக்கப்பட்டதுஆகத்து 14, 1995 (1995-08-14)
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   பத்து தீகா   அடுத்த நிலையம்
சுபாங் ஜெயா <<< தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
சா ஆலாம் >>> கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
பத்து தீகா நிலையம்

பத்து தீகா கொமுட்டர் நிலையம் சுபாங் ஜெயா - சா ஆலாம் மாநகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டப்பட்டது. பத்து தீகா கொமுட்டர் நிலையத்திற்கு அருகிலுள்ள பத்து தீகா நகரத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.[2]

பொது

தொகு

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பத்து தீகா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது; மற்றும் இந்த நிலையம்   கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[3]

பத்து தீகா கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஆனால் அருகிலுள்ள மற்ற கொமுட்டர் நிலையங்களைப் போல் நெரிசல் அடர்த்தியாக இல்லை. இந்த நிலையத்திற்கு அருகில் சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; சுபாங் ஜெயா நிலையம் ஆகிய நிலையங்கள் உள்ளன.

பத்து தீகா

தொகு

பத்து தீகா (Batu Tiga) நகரம் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில், சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் கீழ் அமைந்து உள்ள ஒரு நகர்ப் புறமாகும்.

இந்த நகரம் சுபாங் ஜெயா மற்றும் சா ஆலாம் ஆகிய நகரங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இருப்பினும், இது சுபாங் ஜெயா நகர மையத்தை விட சா ஆலாமிற்கு அருகில் உள்ளது. சுபாங் உயர்த் தொழில்நுட்பத் தொழில் பூங்கா (Subang Hi-Tech Industrial Park), இந்த பத்து தீகா நகரின் புறநகரில் அமைந்துள்ளது.[4]

சுபாங் ஜெயா மாநகராட்சி

தொகு

பத்து தீகா நகரம், சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. முன்னர் காலத்தில் இதன் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழில்துறை பேட்டை உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நகரத்தின் சுற்றுப்புறங்களில் பல தொழிற்சாலைகளை உருவாக்கின. நிறைய வேலை வாய்ப்புகள். மக்கள் தொகையும் கூடியது. அதன் விளைவாக 2000-ஆம் ஆண்டுகளில் மலிவு விலை குடியிருப்புகள் தோன்றின.

சுபாங் ஐடெக் (Subang Hi-Tech) என்பது பத்து தீகாவின் முக்கியத் தொழில்துறை பகுதியாகும். பன்னாட்டு நிறுவனங்களின் பல தலைமையகங்கள் பத்து தீகா தொழில்துறைப் பகுதியில் அமைந்து உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Batu Tiga KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
  2. "Batu Tiga KTM Station". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
  3. "Batu Tiga to KL Sentral KTM Komuter Train Schedule (Jadual) Price". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
  4. Rafee, Hannah; August 29, E. Jacqui Chan / The Edge Malaysia (29 August 2019). "Subang Jaya comprises SS12 to SS19, Taman Wangsa Baiduri, Taman Mutiara Subang, Batu Tiga and Taman Bukit Pelangi. In the late 1980s, Sime UEP Properties Bhd also developed an extension of the Subang Jaya township, UEP Subang Jaya, or better known as USJ. USJ is made up of 27 sections (USJ 1 to USJ 27) besides USJ 3A to 3D, Subang Heights and USJ Heights". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு