பெட்டாலிங் கொமுட்டர் நிலையம்

கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையம்

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Petaling Komuter Station; மலாய்: Stesen Komuter Petaling); சீனம்: 八打灵) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் லெம்பா பந்தாய், கம்போங் பாசிர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

பெட்டாலிங்
Petaling
 KD04 
பெட்டாலிங் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 八打灵
அமைவிடம்கம்போங் பாசிர், பந்தாய் டாலாம், 58200 கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°05′42″N 101°40′11″E / 3.09500°N 101.66972°E / 3.09500; 101.66972
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்   தஞ்சோங் மாலிம்–கிள்ளான்  
நடைமேடை1 பக்க நடைமேடை & 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD04 
வரலாறு
திறக்கப்பட்டது1886
மறுநிர்மாணம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   பெட்டாலிங் ஜெயா   அடுத்த நிலையம்
பந்தாய் டாலாம்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
டெம்பிளர்
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
பெட்டாலிங் நிலையம்

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படும் பெட்டாலிங் கொமுட்டர் நிலையம், பழைய கிள்ளான் சாலை; தாமான் ஓயூஜி (Taman OUG) மற்றும் தாமான் கெம்பிரா (Taman Gembira) குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பயணிகளுக்குச் சேவை செய்கிறது.

பொது

தொகு

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் பழைய கிள்ளான் சாலையின் மேற்கு முனைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. பழைய கிள்ளான் சாலை, பின்னர்   பந்தாய் புதிய விரைவுச்சாலையுடன் இணைகிறது.

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மிகப் பரபரப்பாக இருக்கும். இப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளதால் பள்ளி மாணவர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

கோலாலம்பூர் சென்ட்ரல்-இசுகைபார்க் வழித்தடம் (KL Sentral–Terminal Skypark Line) இந்த நிலையத்தின் வழியாகதான் செல்கிறது. ஆனாலும் கொமுட்டர் தொடருந்துகள் இங்கு நிற்பது இல்லை.

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்

தொகு

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அல்லது கிள்ளான் துறைமுக வழித்தடம் (ஆங்கிலம்: Tanjung Malim–Port Klang Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.[2][3]

இந்த வழித்தடம், மின்சார தொடருந்துகள் மூலமாக இயக்கப்படுகிறது. கிள்ளான் துறைமுகம்; தஞ்சோங் மாலிம் ஆகிய இரு நகரங்களையும்; இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 35 தொடருந்து நிலையங்களையும் இந்தச் சேவை இணைக்கின்றது.[4]

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் கோலாலம்பூர் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. 15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை பத்துமலை வரை இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் தற்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pantai Dalam KTM station is a KTM Komuter train station in Pantai Dalam, Lembah Pantai and served by the KTM Komuter's Port Klang Route". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  2. "The KTM Komuter has been consistently contributing to the train route map in Malaysia. It was established in 1995 to provide a convenient local rail service throughout Kuala Lumpur and surrounding areas of the Klang Valley". www.ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  3. "Port Klang KTM Komuter Station is the western terminus on the Port Klang Line. The South Port Cruise Ship Terminal, Port Klang Police Station, Poslaju Office and the Port Klang Immigration Centre". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  4. "The KTM Pelabuhan Klang Route runs regular Komuter train services from Port Klang in Selangor to Tanjung Malim in Perak, via the main transport hub in Kuala Lumpur, KL Sentral Station". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு