அங்காசாபுரி கொமுட்டர் நிலையம்
அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Angkasapuri Komuter Station; மலாய்: Stesen Komuter Angkasapuri); சீனம்: 安卡萨普里通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அங்காசாபுரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
அங்காசாபுரி Angkasapuri | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD02 | |||||||||||
அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | அங்காசாபுரி, 59200 கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′47″N 101°40′24″E / 3.11306°N 101.67333°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் பிரசரானா மலேசியா (இயக்குபவர்: ரேபிட் ரெயில்) | ||||||||||
தடங்கள் | தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD02 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் அங்காசாபுரிக்கு முதன்மையாகச் சேவை செய்கிறது.
மலேசிய வானொலி தொலைக்காட்சியின் தலைமையகமான அங்காசாபுரியின் பெயரால் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.
பொது
தொகுஇந்த நிலையத்திற்கு அருகில் பந்தாய் டாலாம் மற்றும் கம்போங் கெரிஞ்சியின் சுற்றுப்புறங்கள் உள்ளன. கெரிஞ்சி இலகு தொடருந்து நிலையம் (Kerinchi LRT Station) மற்றும் அப்துல்லா உக்கும் நிலையம் ஆகிய இலகு தொடருந்து நிலையங்களும் அருகிலேயே உள்ளன.[2]
இந்த நிலையத்தில் பாதசாரி அணுகல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
அங்காசாபுரி
தொகுஅங்காசாபுரி (Angkasapuri) என்பது மலேசிய தகவல் துறை அமைச்சின் முக்கிய அரசாங்கக் கட்டிடம் ஆகும். இது மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (RTM) தலைமையகமாகவும் உள்ளது. அங்காசாபுரி கட்டிடம் லெம்பா பந்தாய் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[3][4]
மலேசியாவின் ஒலிபரப்பு மையத்திற்கு, "அங்காசாபுரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.1966-இல் கட்டுமானம் தொடங்கி பிப்ரவரி 1968-இல் நிறைவடைந்தது. அங்காசாபுரியை மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் 17 பிப்ரவரி 1968 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[5]
அங்காசாபுரி வளாகம்
தொகுஅங்காசாபுரி ஒலிபரப்பு மையம் கோலாலம்பூர் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 33 ஏக்கர் நிலப்பரப்பில் 10 மாடிகள் கொண்ட கட்டிடமாக உள்ளது.
அங்காசாபுரியில் இருந்து முதல் ஒலிபரப்பு 6 அக்டோபர் 1969 அன்று தொடங்கியது. விசுமா டெலிவிசன் (Wisma Televisyen) அல்லது விசுமா டிவி (Wisma TV) எனும் தொலைக்காட்சி வளாகம் 6 நவம்பர் 1969-இல் தொடக்கப்பட்டது.[6]
பேருந்துகள் சேவை
தொகுபாதை எண். | நடத்துநர் | தொடக்கம் | இலக்கு | வழி | நிமிடங்கள் | இயக்க நேரம் |
---|---|---|---|---|---|---|
கோ கேஎல் இளஞ்சிவப்பு பாதை | கோ கேஎல் (பேருந்துகள் ரேபிட் கேஎல்) | KD02 கேடிஎம் அங்காசாபுரி |
KJ19 யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் | கெரிஞ்சி சாலை தெற்கு பங்சார் KJ18 |
0.5 - 1 hour | 06:00 - 22:00 |
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Angkasapuri KTM Komuter Station - mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
- ↑ "Angkasapuri KTM station is a KTM Komuter train station located near Angkasapuri, Kuala Lumpur". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
- ↑ Suleiman Ali (1 January 1969). "ANGKASAPURI city of the sky". The Straits Times Annual. p. 74–75. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/stannual19690101-1.2.31. பார்த்த நாள்: 21 January 2018.
- ↑ "ANGKASAPURI 'SIMBOL KEBOROSAN'". Berita Harian. 12 June 1968. p. 5. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/beritaharian19680612-1.2.59. பார்த்த நாள்: 22 January 2018.
- ↑ "Tengku Buka Angkasapuri 17 February". Berita Harian. 20 January 1968. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19680120-1.2.37.
- ↑ "Idea of Angkasapuri mooted". The Straits Times. 17 November 1969. p. 4. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19691117-1.2.144.11. பார்த்த நாள்: 21 January 2018.