யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் அல்லது யுனிவர்சிட்டி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Universiti LRT Station; மலாய்: Stesen LRT Universiti; சீனம்: 大学站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் (2024) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Universiti 大学 | |||||||||||||||
அமைவிடம் | கெரிஞ்சி சாலை கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°06′55″N 101°40′05″E / 3.11528°N 101.66806°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா CC எம்ஆர்டி சுற்று | |||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | |||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KJ19 CC31 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1 செப்டம்பர் 1998) | |||||||||||||||
திறந்தது | 2028-2030 (எம்ஆர்டி) | |||||||||||||||
முந்தைய பெயர்கள் | KL Gateway–Universiti (2015–2021) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்துக் கட்டமைப்பின் முதலாவது கட்டுமானத் திட்டத்தில், பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (Klang Valley Mass Rapid Transit) (MRT System) திட்டத்தின் கீழ் உள்ள எம்ஆர்டி சுற்று வழித்தடத்திற்கு இந்த நிலையம் எதிர்காலப் பரிமாற்ற நிலையமாக அமையும்; மேலும் 2030-ஆம் ஆண்டில் எம்ஆர்டி சுற்று வழித்தடத்தின் கட்டுமானங்கள் நிறைவடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.[3][4]
பொது
தொகுஇந்த நிலையத்திற்கு அருகிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் கெரிஞ்சி சாலையில், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
1 செப்டம்பர் 1998-இல் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழக நிலையம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்த நிலையத்தின் பெயர் கேஎல் கேட்வே-யுனிவர்சிட்டி என மாற்றப்பட்டது. எனினும், மார்ச் 2022-க்குப் பின்னர் நிலையத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையம், மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும், கம்போங் கெரிஞ்சி, தெற்கு பங்சார், பந்தாய் டாலாம் மற்றும் பந்தாய் இல் பார்க் ஆகிய பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[5][6]
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[7]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தோற்றம் | இலக்கு |
---|---|---|
750 | KJ14 பசார் செனி வளாகம் | மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம், சா ஆலாம் |
751 | KJ14 பசார் செனி வளாகம் | தாமான் செரி மூடா, சா ஆலாம் |
772 | KJ14 பசார் செனி வளாகம் | சுபாங் சூரியா |
780 | KJ14 பசார் செனி வளாகம் | கோத்தா டாமன்சாரா |
T788 | KJ19 மலாயா பல்கலைக்கழகம் | யானகா கோபுரம் |
T789 | KJ19 மலாயா பல்கலைக்கழகம் | - |
T790 | KJ22 மலாயா பல்கலைக்கழகம் | பாரமாவுண்ட் பூங்கா |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Universiti LRT Station is an elevated rapid transit station in Petaling Jaya, Selangor forming part of the Kelana Jaya Line. The Station was opened on September 1, 1998". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "The Circle Line (MRT3) is an innovative addition to Klang Valley's urban rail network is set to transform how we move around the city". MRT3 Public Inspection. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "What exactly is a 'circle line'? The name is usually based on what transport system experts call an orbital line, which is meant to "orbit" around the centre in a radial or polar network structure, connecting various radial lines at points other than a central hub". www.malaymail.com. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Universiti LRT Station serves the local population of Universiti Malaya and neighbouring Kampung Kerinchi, Pantai Dalam and Pantai Hill Park". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "The RapidKL bus No. T789 connects the University with the KL Gateway Universiti LRT Station (Kelana Jaya Line). The Kelana Jaya Line will connect you to KL Sentral station where there is connections for KTM Kommuter, KL Monorail and the KTM inter-city rail service and the Masjid Jamek LRT Station where you'll be able to transfer to the other LRT line (Ampang & Sri Petaling Line)". 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Universiti LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.