மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்
மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம் (மலாய்:Pusat Pakar Universiti Malaya; ஆங்கிலம்:Universiti Malaya Specialist Centre) (UMSC) என்பது மலேசியாகோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஆகும். மலேசியாவில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகளில் மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையமும் ஒன்றாக அறியப்படுகிறது.[2]
மலேசிய அரசு | |
---|---|
மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம் | |
அமைவிடம் | யுனிவர்சிட்டி சாலை, லெம்பா பந்தாய், கோலாலம்பூர், மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் |
ஆள்கூறுகள் | 3°6′58.2739″N 101°39′2.6669″E / 3.116187194°N 101.650740806°E |
மருத்துவப்பணி | நிபுணத்துவ மருத்துவமனை |
நிதி மூலதனம் | தனியார் |
வகை | முழு சேவை மருத்துவமனை |
இணைப்புப் பல்கலைக்கழகம் | மருத்துவத் துறை, மலாயா பல்கலைக்கழகம் (Faculty of Medicine, University of Malaya)[1] |
அவசரப் பிரிவு | 24 மணி நேர சேவை |
படுக்கைகள் | 95 |
நிறுவல் | 1998 |
வலைத்தளம் | [umsc Universiti Malaya Specialist Centre Pusat Pakar Universiti Malaya] |
பட்டியல்கள் |
பொதுத் துறையிலிருந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள், தனியார் மருத்துவத் துறைக்குப் புலம் பெயர்வதைத் தடுப்பதற்கான முயற்சியாக, 1998-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் அதன் மருத்துவத் துறையினால் இந்த நிபுணத்துவ மையம் நிறுவப்பட்டது.
பொது
தொகுநாட்டின் முதன்மையான நிபுணத்துவ மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த மருத்துவ மையத்தில் 270-க்கும் மேற்பட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள்; பேராசிரியர்கள் உள்ளனர். சிக்கலான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளை நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக தீர்வு காண்கின்றனர். இந்த நிபுணத்துவ மருத்துவமனையில் 40 சிகிச்சை அறைகள்; 99 படுக்கைகள்; மற்றும் நான்கு பல் மருத்துவ அறைகளும் உள்ளன.
1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மையம், தொடக்கத்தில் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (Universiti Malaya Medical Centre) அமைந்திருந்தது. 2007-ஆம் ஆண்டில் தன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் தான் மலேசியாவின் மிகப்பெரிய கற்பித்தல் மருத்துவமனை ஆகும்; மற்றும் மலேசியாவின் பழமையான மருத்துவப் பள்ளியாகவும் கருதப்படுகிறது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About UMSC". www.umsc.my. UM Specialist Centre. Archived from the original on 14 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "UM Specialist Centre Continues To Educate The Public". News Hub Asia. 16 September 2020. https://www.newshubasia.com/post/um-specialist-centre-continues-to-educate-the-public/. பார்த்த நாள்: 17 June 2022.
- ↑ "UMSpecialist Centre was named Quaternary Hospital of the Year - Malaysia at the Healthcare Asia Awards". Healthcare Asia Magazine. 3 April 2023. https://healthcareasiamagazine.com/co-written-partner/event-news/um-specialist-centre-was-named-quaternary-hospital-year-malaysia-healthcare-asia-awards. பார்த்த நாள்: 17 June 2023.