லெம்பா பந்தாய்

கோலாலம்பூர், தென் மேற்கு பகுதியில் ஒரு புற நகரம்

லெம்பா பந்தாய், (மலாய்: Lembah Pantai; ஆங்கிலம்: Lembah Pantai; சீனம்: 班底谷); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். இது ஒரு துணை மாவட்டம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதியும் ஆகும்.

லெம்பா பந்தாய்
புறநகர்
Lembah Pantai
லெம்பா பந்தாய் is located in மலேசியா
லெம்பா பந்தாய்
      லெம்பா பந்தாய்
ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E / 3.214222°N 101.638917°E / 3.214222; 101.638917
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
புறநகர்லெம்பா பந்தாய்
தொகுதிகோலாலம்பூர்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு55100
மலேசியத் தொலைபேசி எண்+603-207
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான புறநகரப் பகுதியாக விளங்குகிறது. லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே (Seputeh), சிகாம்புட் (Segambut), மற்றும் புக்கிட் பிந்தாங் (Bukit Bintang). 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 148,094 ஆகும்.




2020-இல், லெம்பா பந்தாய் மக்கள் தொகை இன வாரியாக[1]

  இதர இனத்தவர் (0.79%)

பிரிவுகள் தொகு

பங்சார் தொகு

லெம்பா பந்தாய் தொகுதியின் (Lembah Pantai Constituency) கீழ் வரும் மிகவும் பிரபலமான பகுதிகளில் பங்சார் தொகுதியும் ஒன்றாகும். இந்தப் பகுதி ஒரு பிரபலமான மேல்நிலை குடியிருப்பு பகுதி; மற்றும் ஒரு பொழுதுபோக்கு பகுதியும் ஆகும்.

பந்தாய் டாலாம் தொகு

பந்தாய் டாலாம் (Pantai Dalam) என்பது பங்சார் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதி. பந்தாய் டாலம் பகுதியில் பெரிய குடியிருப்புப் பகுதியை உருவாக்கும் பல சிறிய குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. அவற்றின் பட்டியல்:

  • பந்தாய் ஹில்பார்க் - Pantai Hillpark
  • கம்போங் பந்தாய் - Kampung Pantai
  • பிபிஆர் ஸ்ரீ பந்தாய் - PPR Sri Pantai
  • பிபிஆர் பந்தாய் ரியா - PPR Pantai Ria
  • தேசா அமான் 1 & 2 - Desa Aman 1 & 2
  • பந்தாய் முர்னி - Pantai Murni
  • தாமான் புக்கிட் அங்காசா - Taman Bukit Angkasa
  • பந்தாய் பாரு - Pantai Baru
  • கம்போங் பாசிர் - Kampung Pasir
  • தாமான் பந்தாய் டாலாம் - Taman Pantai Dalam
  • தாமான் பந்தாய் இண்டா - Taman Pantai Indah
  • பிபிஆர் கம்போங் லீமாவ் - PPR Kampung Limau
  • தாமான் டத்தோ - Taman Dato'

அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகள் தொகு

பந்தாய் டாலாம் (Pantai Dalam) நகர்ப்புறத்தில் பெரும்பான்மையோர் மலாய்க்காரர்கள். இவர்களில் இரு தரப்பினர்: வசதியானவர்கள் ஒரு தரப்பினர்; மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர் இன்னொரு தரப்பினர். வசதியானவர்கள் உயர் அடுக்குமாடி சொகுசு குடியிருப்புப் பகுதியில் உள்ளனர்.

வசதியானவர்கள், பந்தாய் ஹில்பார்க்கில் (Pantai Hillpark) உள்ள அண்டலூசியா அடுக்குமாடி வீடுகள் (Andalusia Condominium); கம்போங் பந்தாய் (Kampung Pantai), பந்தாய் ஹால்ட் (Pantai Halt) சொகுசு பங்களாக்களில் வாழ்கின்றனர்.

தொழிலாளர் வர்க்கத்தினரைப் பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் குறைந்த கட்டண அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்:

  • பல வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த வீடுகளில் இருந்து மீள்குடியேற்றப்பட்டவர்கள்; மக்கள் வீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்கள்.
  • மலாயா பல்கலைக்கழக மாணவர்கள்.[2]
  • போலீஸ் அதிகாரிகள்/பணியாளர்கள்; (தேசா அமான் 1 & 2-இல்).

புதிய பந்தாய் விரைவுச்சாலை தொகு

பந்தாய் டாலாம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுடன் புதிய பந்தாய் விரைவுச்சாலை (New Pantai Expressway) மற்றும் கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) போன்ற சாலைகளின் வழியாக நன்கு இணைக்கப்பட்டு உள்ளது.

லெம்பா பந்தாய் தொகுதியின் மற்ற பகுதிகள் தொகு

போக்குவரத்து தொகு

பொது போக்குவரத்து தொகு

  கிளானா ஜெயா தடத்தில் உள்ள 4 எல்ஆர்டி (LRT) நிலையங்கள்:

  •  KJ16  பங்சார்,
  •  KJ17  அப்துல்லா உக்கும்,
  •  KJ18  கெரிஞ்சி
  •  KJ19  யுனிவர்சிட்டி;

  கோலா கிள்ளான் தடத்தில் உள்ள 3 கேடிஎம் (KTM) நிலையங்கள்:

  •  KD01  அப்துல்லா உக்கும்,
  •  KD02  அங்காசாபுரி,
  •  KD03  பந்தாய் டாலாம்;

  சிரம்பான் தொடருந்து சேவை 1 கேடிஎம் (KTM) நிலையம்:

  •  KB01  மிட் வேலி கொமுட்டர் நிலையம்.

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.
  2. "Universiti Malaya Pluse of Lembah Pantai represents an initiative of UM through UMCares to develop a helping and meaningful relationship with the community, particularly ones within the vicinity of the University". myumcares.um.edu.my. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022. {{cite web}}: no-break space character in |title= at position 41 (help)

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெம்பா_பந்தாய்&oldid=3614261" இலிருந்து மீள்விக்கப்பட்டது