மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம்
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Sains Islam Malaysia; ஆங்கிலம்:Islamic Science University of Malaysia என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், நீலாய், புறநகரில் உள்ள ஒரு பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம் ஆகும். ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமான இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு வளாகங்கள் உள்ளன.
குறிக்கோளுரை | அறிவு, ஒழுக்கம் மற்றும் பக்தி (Berilmu, Berdisiplin Dan Bertakwa) (Knowledgeable, Disciplined and Devout) |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1998 |
வேந்தர் | துவாங்கு ஆயிசா ரொகானி (Tuanku Aishah Rohani) |
மாணவர்கள் | 33,948 (2024)[1] |
பட்ட மாணவர்கள் | 11,645 (2024)[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1,173 (2024)[1] |
அமைவிடம் | Bandar Baru Nilai, 71800 Nilai, Negeri Sembilan , , , 2°50′37″N 101°46′37″E / 2.84361°N 101.77694°E |
சேர்ப்பு | ASAIHL, ACU, இசுலாமிய உலகக் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு[2] |
இணையதளம் | www |
நெகிரி செம்பிலான், நீலாய் நகர்ப்பகுதியில் முதன்மை வளாகம்; மற்றும் கோலாலம்பூர் பாண்டான் இண்டாவில் ஒரு மருத்துவ வளாகம் (Fakulti Perubatan dan Kesihatan (FPSK); Fakulti Pergigian (FPg) என இரு வளாகங்கள் உள்ளன.
பொது
தொகுமலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (USIM) என்பது 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மலேசிய அரசாங்கத்தால் முதன்முதலில் நிறுவப்பட்ட ஒரு மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது.
இது நாட்டின் 12-ஆவது பொது உயர்க்கல்வி நிறுவனம்; மற்றும் மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகக் கல்லூரி (Kolej Universiti Islam Malaysia) (KUIM) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். 13 மார்ச் 1998-இல் பொதுப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது
அம்பாங் மருத்துவ வளாகம்
தொகுதொடக்கத்தில் மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் என்பது பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழக வளாகத்தில் (International Islamic University Malaysia) (IIUM) அமைக்கபட்டது.[3] பின்னர் இந்தப் பல்கலைக்கழகம் சனவரி 2000-இல் பாங்கியில் உள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் செயல்படத் தொடங்கியது.[4]
15 சூலை 2005 அன்று, மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், நீலாய் நகரில் உள்ள நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்பட்டன. அதே வேளையில் மருத்துவ வளாகம் சிலாங்கூர் அம்பாங் பகுதியிலேயே செயல்பட்டது; நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்பட்டவில்லை.
இந்தப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக பல்கலைக்கழகத் தகுதிக்கு மேம்படுத்தப்பட்டு 1 பிப்ரவரி 2007 அன்று மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு சூலை வரையில், மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் 33,948 மாணவர்களைப் பதிவு செய்துள்ளது.[1]
துறைகள்
தொகுபல்கலைக்கழகத்தின் தற்போதைய துறைகள்:
- குரான் சுன்னா கல்வித்துறை - Faculty of Quran & Sunnah Studies (FPQS)
- தலைமைத்துவ மற்றும் மேலாண்மைத் துறை - Faculty of Leadership & Management (FKP)
- சரியா சட்டத்துறை - Faculty of Shariah & Law (FSU)
- பொருளாதாரம் நிதித் துறை - Faculty of Economics & Finance (FEM)
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - Faculty of Science & Technology (FST)
- மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை - Faculty of Medicine and Health Sciences (FPSK)
- முதன்மை மொழி ஆய்வுகள் துறை - Faculty of Main Language Studies (FPBU)
- பல் மருத்துவத் துறை - Faculty of Dentistry (FPG)
- பொறியியல் & குடிசார் பொறியியல் துறை - Faculty of Engineering & Civil Engineering (FKAB)
காட்சியகம்
தொகு-
சொற்பொழிவு அரங்கம்
-
ஒத்திகை வாதாடு மன்றம்
-
நூலகம்
-
வானொலி நிலையம்
-
அறிவியல் ஆய்வகம்
-
மருத்துவ ஆய்வகம்
-
பல் ஆய்வகம்
-
தகவல் பரிமாற்ற மையம்
-
விளையாட்டு செயல்பாடு
-
சுகாதார வசதி
-
மாணவர்கள் வளாகம்
-
சிற்றுண்டியகம்
-
மருத்துவ மாணவர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Misran, Amirul Afif. "Universiti Sains Islam Malaysia". Universiti Sains Islam Malaysia (in ஆங்கிலம்). Strategic Communication Centre; USIM. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ [1] பரணிடப்பட்டது 26 சனவரி 2005 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Islamic college to be located in IIU's former PJ campus". New Straits Times. 14 June 1997. https://www.klik.com.my/item/story/1187135/islamic-college-to-be-located-in-iiu-s-former-pj-campus. பார்த்த நாள்: 5 March 2022.
- ↑ Abdul Jalil Mohd Shah (17 February 2000). "Kolej Universiti Islam Malaysia bakal lahir golongan ilmuwan". Berita Harian. https://www.klik.com.my/item/story/2014254/kolej-universiti-islam-malaysia-bakal-lahir-golongan-ilmuwan. பார்த்த நாள்: 5 March 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Islamic Science University of Malaysia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- https://web.archive.org/web/20111012124116/http://www.usimonline.my/
- http://goals.usim.edu.my/moodle/index.php பரணிடப்பட்டது 2021-05-13 at the வந்தவழி இயந்திரம்
- http://egallery.usim.edu.my/
- http://ddms.usim.edu.my/ பரணிடப்பட்டது 2023-09-30 at the வந்தவழி இயந்திரம்
- http://radio.usim.edu.my/
- http://alumni.usim.edu.my/index.php