கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம்
கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் அல்லது கெரிஞ்சி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kerinchi LRT Station; மலாய்: Stesen LRT Kerinchi; சீனம்: 轻轨科林芝站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் (2024) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Kerinchi 轻轨科林芝站 | ||||||||||
அமைவிடம் | பிளாசா பந்தாய், பங்சார் கோலாலம்பூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′55″N 101°40′05″E / 3.11528°N 101.66806°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா வழித்தடம் | ||||||||||
நடைமேடை | 2 பக்க மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ18 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 செப்டம்பர் 1998) | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவின் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.[3]
பொது
தொகுகோலாலம்பூர், பங்சார், பந்தாய் பாரு சாலைக்கு அருகிலுள்ள பிளாசா பந்தாய் (Plaza Pantai) எனும் வணிக வளாகத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் செரி தாஸ்மேஸ் தனியார்ப் பள்ளி, பங்சார் தேசியப் பள்ளி, பந்தாய் காவல் நிலையம், செரி முத்து மாரியம்மன் கோயில், விசுமா யுஓஏ பந்தாய், டெலிகாம் கோபுரம், அர்-ரகா கம்போங் கெரிஞ்சி பள்ளிவாசல், தெற்கு பங்சார் மற்றும் மலேசிய வானொலி தொலைக்காட்சி (ஆர்டிஎம்) அங்காசாபுரி வளாகத்திற்கும் அருகில் உள்ளது. .
கம்போங் கெரிஞ்சி
தொகுநிலையத்தின் பெயரான கெரிஞ்சி என்பது கம்போங் கெரிஞ்சி எனும் கிராமப் பகுதியில் இருந்து பெறப்பட்டது. கம்போங் கெரிஞ்சி, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரப் பகுதியாகும். இந்தப் புறநகரம், லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. பங்சார் பெருநகரப் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதி, டெலிகாம் கோபுரம் (Menara Telekom) மற்றும் மிட் வேலி மெகாமாலுக்கு (Mid Valley Megamall) அருகில் அமைந்துள்ளது; அருகிலுள்ள மற்ற குறிப்பிடத்தக்க அடையாளங்கள் அங்காசாபுரி கட்டிடம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகும்.
செரி அங்காசா
தொகுவிசுதா அங்கசா (Vista Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள், கம்போங் கெரிஞ்சி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் செரி அங்காசா (Sri Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை அருகாமையில் இருக்கும் குடியிருப்புத் திட்டங்களாகும்.
இந்த நிலையம் செரி அங்காசா, பங்சார், கம்போங் கெரிஞ்சி பகுதிகளுக்குச் சேவை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
அமைப்பு
தொகுகெரிஞ்சி எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன.
இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது.
கம்போங் கெரிஞ்சி குடியிருப்புப் பகுதிகள்; கிளானா ஜெயா வழித்தடத்தின் KJ18 கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் (Kerinchi LRT Station); KJ19 யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் (Universiti LRT Station); ஆகியவற்றுடன் பாதசாரி பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
750 | KJ14 பசார் செனி வளாகம் | மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம், சா ஆலாம் |
751 | KJ14 பசார் செனி வளாகம் | தாமான் செரி மூடா, சா ஆலாம் |
772 | KJ14 பசார் செனி வளாகம் | சுபாங் சூரியா |
780 | KJ14 பசார் செனி வளாகம் | கோத்தா டாமன்சாரா |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "Kerinchi LRT Station located inside Plaza Pantai". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Kerinchi LRT Station is an elevated rapid transit station in Kuala Lumpur, forming part of the Kelana Jaya Line. The Station was opened on September 1, 1998, as part of the line's first segment encompassing 10 elevated stations between Kelana Jaya Station and Pasar Seni Station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kerinchi LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.