பந்தாய் டாலாம் கொமுட்டர் நிலையம்
பந்தாய் டாலாம் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Pantai Dalam Komuter Station; மலாய்: Stesen Komuter Pantai Dalam); சீனம்: 班底达南) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் லெம்பா பந்தாய், பந்தாய் டாலாம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
பந்தாய் டாலாம் Pantai Dalam | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD03 | |||||||||||
பந்தாய் டாலாம் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 班底达南 | ||||||||||
அமைவிடம் | பந்தாய் டாலாம், 59200 கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°05′42″N 101°40′11″E / 3.09500°N 101.66972°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD03 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் லெம்பா பந்தாய், பந்தாய் டாலாம் பயணிகளுக்கு முதன்மையாகச் சேவை செய்கிறது.
லெம்பா பந்தாய் மற்றும் கிள்ளான் லாமா சாலையின் வடக்குப் பகுதிகளில் உள்ள தாமான் தேசா, இசுகாட் கார்டன், கூச்சாய் லாமா போன்ற குடியிருப்புப் பகுதிகளில்; போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த நிலையம் கட்டப்பட்டது.
பொது
தொகுஇந்த நிலையத்திற்கு அருகில் பந்தாய் டாலாம் மற்றும் கம்போங் கெரிஞ்சியின் சுற்றுப்புறங்கள் உள்ளன. கெரிஞ்சி இலகு தொடருந்து நிலையம் (Kerinchi LRT Station) மற்றும் அப்துல்லா உக்கும் நிலையம் ஆகிய இலகு தொடருந்து நிலையங்களும் அருகிலேயே உள்ளன.
பந்தாய் டாலாம் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மிகப் பரபரப்பாக இருக்கும். - 1980-களில் பந்தாய் டாலாம் நிலையம் என்பது அதன் தற்போதைய பெயரான பந்தாய் டாலாம் என்பதைப் பெறுவதற்கு முன்பு சுருக்கமாக பந்தாய் நிலையம் என்றே அழைக்கப்பட்டது.[2]
பந்தாய் டாலாம்
தொகுபந்தாய் டாலாம் (Pantai Dalam) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். பந்தாய் டாலாம் (Pantai Dalam) நகர்ப்புறத்தில் பெரும்பான்மையோர் மலாய்க்காரர்கள்.
இவர்களில் இரு தரப்பினர் உள்ளனர். வசதியானவர்கள் ஒரு தரப்பினர்; மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர் இன்னொரு தரப்பினர். வசதியானவர்கள் உயர் அடுக்குமாடி சொகுசு குடியிருப்புப் பகுதியில் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் குடியிருந்த வீடுகளில் இருந்து மீள்குடியேற்றப்பட்டவர்கள்; குறைந்த விலை மக்கள் வீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pantai Dalam KTM station is a KTM Komuter train station in Pantai Dalam, Lembah Pantai and served by the KTM Komuter's Port Klang Route". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
- ↑ "KTM Klang Valley Network 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Pantai Dalam Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Pantai Dalam KTM Komuter Station