கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Jalan Kastam Komuter Station; மலாய்: Stesen Komuter Jalan Kastam); சீனம்: 关税路) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் துறைமுகம் கஸ்தாம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
கஸ்தாம் சாலை Jalan Kastam | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD18 | |||||||||||
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 关税路 | ||||||||||
அமைவிடம் | கஸ்தாம் சாலை, கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°0′46″N 101°24′9″E / 3.01278°N 101.40250°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | KD18 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
தொடருந்து இயக்குபவர்கள் | KD18 மலாயா தொடருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD18 | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 25 kV AC மின்மயமாக்கல் | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம், கோலா கிள்ளான் நகரத்திற்கு மிக அருகில் உள்ளது.[2]
இந்த நிலையம் கஸ்தாம் சாலை புறநகர்ப் பகுதியின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.
பொது
தொகுகஸ்தாம் சாலை நிலையத்திற்கு அருகில் மலாயா தொடருந்து நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. தற்போது அந்தக் கிடங்கு பழைய தொடருந்து இயந்திரங்களைக் கிடத்தி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவை பின்னர் பழைய இரும்பு வணிகர்களிடம் அனுப்பப்படும்.[3]
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் கோலா கிள்ளான் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை என்ற புறநகர்ப் பகுதியின் பெயரால் பெயரிடப்பட்டது.[4]
1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கஸ்தாம் சாலை நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jalan Kastam KTM station is a commuter train halt located in Port Klang, Selangor and served by the Sentul-Port Klang Route of the KTM Komuter railway system". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "The KTM Jalan Kastam Railway Station (Stesen Keretapi) is located in Port Klang in the state of Selangor and is a stop on the KTM Komuter Route (Laluan) between Tanjung Malim and Pelabuhan Klang (via KL Sentral station)". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "The KTM scrapyard and depot located beside the Station to house old, broken down locomotives". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "KTM Komuter - Jalan Kastam Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 19 December 2010. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.