கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்

கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Raja Uda Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Raja Uda); சீனம்: 甘榜拉惹乌达) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

கம்போங் ராஜா ஊடா
Kampung Raja Uda
 KD17  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 甘榜拉惹乌达
அமைவிடம்கம்போங் ராஜா ஊடா, கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°1′13″N 101°24′37″E / 3.02028°N 101.41028°E / 3.02028; 101.41028
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD17  தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD17 
வரலாறு
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   கிள்ளான்   அடுத்த நிலையம்
தெலுக் காடோங்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
கம்போங் ராஜா ஊடா நிலையம்

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1]

இந்த நிலையம் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி; ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]

பொது

தொகு

கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா என்ற கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கம்போங் ராஜா ஊடா நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

சா ஆலாம் விரைவுச்சாலை

தொகு

இந்த நிலையத்தில் இருந்து கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) எனும் (கெசாஸ் நெடுஞ்சாலை) (Konsortium Expressway Shah Alam Selangor - KESAS); கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (New Klang Valley Expressway - NKVE) ஆகிய நெடுஞ்சாலைகளுக்குச் செல்ல 10 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும்.[3]

தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Kampung Raja Uda KTM Komuter Station is a KTM commuter train station on Sentul-Port Klang Line. The station was opened on 1995 to catered the KTM Komuter". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
  2. "KTM Kampung Raja Uda Schedule (Jadual) Komuter to KL Sentral". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
  3. "Kampung Raja Uda is a very convenient location, it only takes 10 minutes to Federal Highway, Kesas Highway, NKVE Highway". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு