தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்

கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையம்

தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Teluk Gadong Komuter Station; மலாய்: Stesen Komuter Teluk Gadong); சீனம்: 直落牙弄) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.

தெலுக் காடோங்
Teluk Gadong
 KD16  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 直落牙弄
அமைவிடம்தெலுக் காடோங், கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°02′03.53″N 101°25′31.11″E / 3.0343139°N 101.4253083°E / 3.0343139; 101.4253083
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD16  தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD16 
வரலாறு
திறக்கப்பட்டது1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   கிள்ளான்   அடுத்த நிலையம்
தெலுக் பூலாய்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
கம்போங் ராஜா ஊடா
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
தெலுக் காடோங் நிலையம்

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1]

இந்த நிலையம் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி போன்ற பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]

பொது

தொகு

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[3]

தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

தாமான் கெம்பீரா வளாகம்

தொகு

1995-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, 2020-ஆம் ஆண்டில் தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தாமான் கெம்பீரா (Taman Gembira) எனும் குடியிருப்பு வளாகம் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Teluk Gadong KTM station is a commuter train halt located in Klang and served by the Port Klang Route of the KTM Komuter railway system". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
  2. "The KTM Teluk Gadong Station (Stesen Keretapi Teluk Gadong) is located in the district of Klang, Selangor, and is a stop for KTM Komuter trains (commuter) on the Port Klang Line with regular services to Kuala Lumpur KL Sentral". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
  3. "Teluk Gadong, located south-west from township of Klang and located close to residential area and is within walking distance". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு