கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம்

பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Dato Harun Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Dato Harun); சீனம்: 八打灵) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

கம்போங் டத்தோ அருண்
Kampung Dato Harun
 KD06  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 八打灵
அமைவிடம்கம்போங் டத்தோ அருண், 46100, பெட்டாலிங் ஜெயா
சிலாங்கூர்
மலேசியா
ஆள்கூறுகள்3°05′04″N 101°37′56″E / 3.08444°N 101.63222°E / 3.08444; 101.63222
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு  KD06 
வரலாறு
திறக்கப்பட்டதுஆகத்து 14, 1995 (1995-08-14)
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   பெட்டாலிங் ஜெயா   அடுத்த நிலையம்
பெட்டாலிங் <<< தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
செரி செத்தியா >>> கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
கம்போங் டத்தோ அருண் நிலையம்

கம்போங் டத்தோ அருண் நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 51 இல் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. கம்போங் டத்தோ அருண் நிலையத்திற்கு அருகிலுள்ள மலாய் கிராமமான கம்போங் டத்தோ அருண் எனும் கிராமத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் பந்தாய் புதிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

பொது

தொகு

கம்போங் டத்தோ அருண் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், பயணிகள் தங்களின் தொழில் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

ரேபிட் கேஎல் பெரும் கோலாலம்பூரின் பேருந்து வழித்தடம் 641 (Greater Kuala Lumpur Bus Routes) மற்றும் பிஜே சிட்டி பேருந்து வழி PJ01 ஆகியவை இந்த நிலையத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேவை செய்கின்றன.

இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மகா லாமா நிலையம்

தொகு

கான்டினென்டல் சைம் டயர் சென்டிரியான் பெர்காட் (Continental Sime Tyre Sdn Bhd), நெஸ்லே நிறுவனம் (Nestle Manufacturing (M) Sdn Bhd), சப்புரா நிறுவனம் (Sapura Resources Bhd) போன்ற தொழில் நிறுவனங்களும்; தாமான் மேடான் ஜெயா (Taman Medan Jaya) மற்றும் தேசா மெந்தாரி (Desa Mentari) போன்ற குடியிருப்புப் பகுதிகளும் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன.

இந்த நிலையத்திற்கு 1980-களில் மகா லாமா நிலையம் (MAHA Lama Station) என்று பெயரிடப்பட்டது.[2]

ரேபிட் கேஎல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kampung Dato Harun station is a KTM Komuter train station in Pantai Dalam, Lembah Pantai and served by the KTM Komuter's Port Klang Route". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  2. "KTM Klang Valley Network 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு