ராசா கொமுட்டர் நிலையம்


ராசா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Rasa Commuter Station மலாய்: Stesen Komuter Rasa); சீனம்: 新古毛火车站) என்பது மலேசியா, பேராக், உலு சிலாங்கூர் மாவட்டம், ராசா நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். ராசா நகரத்தின் பெயரே இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[1]

ராசா
 KA13  KTM_Komuter_Logo Seremban Line கொமுட்டர்
ராசா கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்44000, ராசா, மலேசியா
ஆள்கூறுகள்3°30′00″N 101°38′03″E / 3.50000°N 101.63417°E / 3.50000; 101.63417
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
இயக்குபவர் கேடிஎம் கொமுட்டர்
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA13 
வரலாறு
திறக்கப்பட்டதுஏப்ரல் 21, 2007
மின்சாரமயம்ஏப்ரல் 21, 2007
சேவைகள்
முந்தைய நிலையம்   மலாயா தொடருந்து நிறுவனம்   அடுத்த நிலையம்
   
கோலா குபு பாரு
தஞ்சோங் மாலிம்
 
  Komuter   தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
பத்தாங்காலி
கிள்ளான்
அமைவிடம்
Map
ராசா கொமுட்டர் நிலையம்

இந்த நிலையம் 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி, பத்தாங்காலி (Batang Kali) மற்றும் செரண்டா (Serendah) நகரங்களில் இருக்கும் கொமுட்டர் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]

பொது

தொகு

2016-இல் கிள்ளான் துறைமுக வழித்தடத்துடன் இந்த ராசா கொமுட்டர் நிலையம் இணைக்கப்படும் வரை, ரவாங் - தஞ்சோங் மாலிம் இடைவழிச் சேவையில் (Rawang - Tanjung Malim Shuttle Service) மூன்றாவது நிறுத்தமாக இருந்தது. இதற்கு முன்னர் ரவாங் - தஞ்சோங் மாலிம் இடைவழிச் சேவை என்பது ரவாங் - கோலா குபு பாரு இடைவழிச் சேவை (Rawang - Kuala Kubu Bharu Shuttle Service) என்று அழைக்கப்பட்டது.[3]

கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற அனைத்து நிலையங்களையும் போலவே; பெரும்பாலான கேடிஎம் கொமுட்டர் நிலையங்களில் இரண்டு நடைபாதைகளும் இரண்டு தொடருந்துச் சேவைகளும் (கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் உள்ளன.

பயணச்சீட்டு வசதிகள்

தொகு

இதில் தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் விதிவிலக்கு. ஏனெனில் தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையத்தில் மட்டும் 3 தொடருந்து பாதைகளும் ஒரு தீவும் உள்ளன. ஆனாலும், பொதுவாக பெரிய தொடருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளையும் இந்த ராசா கொமுட்டர் நிலையம் கொண்டுள்ளது.

இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); கொமுட்டர் பயனர்களுக்குப் பிரத்தியேகமாக ஒரு கால் பாலம் (Foot Bridge) போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.

சேவைகள்

தொகு

இந்த கொமுட்டர் நிலயம், ராசா நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் ராசா நகரத்திற்கு அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. ராசா நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் ராசா நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

பேராக், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் ராசா நகரின் மையப் பகுதியில் இருந்து இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை சற்று தொலைவில் உள்ளது.

கிள்ளான் துறைமுகம் துறைமுகத்திற்கான நேரடி சேவைகள் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

சிலாங்கூர் தொடருந்து சேவை

தொகு

1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது.

சிலாங்கூர் இரயில்வே எனும் சிலாங்கூர் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ரவாங் நகரில் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கோலா குபு பாரு நகரிலும் அமைக்கப்பட்டன.[4]

ரவாங் - ஈப்போ இரட்டை வழித்தடம்

தொகு

ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் சிலிம் ரிவர் நிலையம் உள்ளது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது.

இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[5]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை

தொகு

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது.

ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது.[6]

ராசா நிலைய காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Rasa KTM Komuter station is a commuter train station stationed at the northern side of the town of Rasa, Selangor. It is one of the stations on KTM Komuter railway services". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  2. "The station was opened on April 21, 2007 alongside the Batang Kali and Serendah stations, and is the first stop in the Rawang-Tanjung Malim shuttle service (formerly known as the Rawang-Kuala Kubu Bharu shuttle service)". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  3. "Rasa KTM Komuter train station is a stop on the Tanjung Malim - Port Klang Komuter Route (Laluan) with regular trains departing from Rasa to KL Sentral Railway Station in Kuala Lumpur, then travelling on to Port Klang on the coast". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  4. "First railway station in Ipoh was constructed in 1894. It served the town for 20 years. It was a single storey building with no accommodations". 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  5. "DRB-Hicom taken to task over delay", The Star (Malaysia), p. 8, 1 July 2005
  6. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசா_கொமுட்டர்_நிலையம்&oldid=4163041" இலிருந்து மீள்விக்கப்பட்டது