சா ஆலாம் வழித்தடம்
சா ஆலாம் வழித்தடம் (ஆங்கிலம்: Shah Alam Line அல்லது LRT Shah Alam Line; அல்லது LRT Bandar Utama-Johan Setia Line; மலாய்: Laluan Shah Alam அல்லது Laluan LRT Bandar Utama–Johan Setia) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், சா ஆலாம் மற்றும் கிள்ளான் நகர்ப்புறங்களுக்குச் சேவை செய்யும் ஒரு விரைவுத் தொடருந்து வழித்தடம் ஆகும். தற்போது இந்த வழித்தடம் கட்டுமானத்தில் உள்ளது.[6]
சா ஆலாம் வழித்தடம் Shah Alam Line | |
---|---|
சா ஆலாம் வழித்தடம் கட்டுமானத்தில் (2022) | |
கண்ணோட்டம் | |
வேறு பெயர்(கள்) | LRT 3 |
பூர்வீக பெயர் | LRT Laluan Shah Alam |
நிலை | கட்டுமானத்தில் |
உரிமையாளர் | பிரசரானா |
வழித்தட எண் | வெளிர் நீலம் |
வட்டாரம் | கோலாலம்பூர் – சுபாங் ஜெயா – சுபாங் விமான நிலையம் |
முனையங்கள் | |
நிலையங்கள் | 25 (கட்டுமானத்தில்)[1][2] |
இணையதளம் | lrt3 |
சேவை | |
வகை |
|
அமைப்பு | ரேபிட்கேஎல் |
செய்குநர்(கள்) | ரேபிட் ரெயில் |
பணிமனை(கள்) | ஜொகான் செத்தியா கிடங்கு |
சுழலிருப்பு | CRRC Zhuzhou LRV 29 மூன்று-வண்டி தொடருந்துகள்[3] அகலம்: 2.7 m (8 அடி 10 அங்) - குறுகிய அமைப்பு நீளம்: 57.60 m (189.0 அடி) |
வரலாறு | |
திட்டமிட்ட திறப்பு | அக்டோபர் 2025 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 26 km (16 mi)37.8 கி.மீ [4] உயர்த்தப்பட்ட நிலை: 35.8 கி.மீ நிலத்தடி: 2 கி.மீ[5] |
குணம் | 95% உயர்த்தப்பட்ட நிலை 5% நிலத்தடி |
தட அளவி | 1 மீட்டர் |
மின்மயமாக்கல் | 750 V DC |
கடத்தல் அமைப்பு | தானியங்கி தொடருந்து |
இயக்க வேகம் | 80 கி.மீ |
இது மூன்றாவது இலகு விரைவு தொடருந்து வழித்தடமாகவும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்காவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பாகவும் இருக்கும்.
பொது
தொகுபிரசரானா மலேசியாவின் ரேபிட் ரெயில் துணை நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் இயக்கப்படும். 24 ஏப்ரல் 2013-இல் இந்தத் திட்டம் பிரசரானா மலேசியா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.
இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
25 நிலையங்கள்
தொகுஇந்த வழித்தடத்தில் 25 நிலையங்கள் உள்ளன. 37.8 கிமீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், பெரும்பாலும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. அத்துடன் ஒரே ஒரு நிலத்தடி நிலையம் மட்டுமே உள்ளது.
இந்த வழித்தடத்தில், KG09 பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்தில் எம்ஆர்டி காஜாங் வழித்தடம்; KJ27 கிளன்மேரி எல்ஆர்டி நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடம் எனும் இரண்டு பரிமாற்ற வழித்தடங்களின் சேவைகளும் உள்ளன.
வரலாறு
தொகுமுன்னதாக, மொத்தம் 26 நிலையங்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு நிலையத்திற்கும் இடையே இரண்டு கிலோமீட்டர் தூர இடைவெளி வரையறுக்கப்பட்டது.அவற்றுள் ஒரு நிலையம் நிலத்தடி நிலையமாக இருக்க வேண்டும்; மற்ற 25 நிலையங்கள் உயர்த்தப்பட்ட நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.
2018 மலேசியப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம் இந்தத் திட்டத்தின் செலவைக் குறைக்க முடிவு செய்தது.
அதன் காரணமாக தொடக்கத் திட்டத்தில் ஆறு நிலையங்களின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
திட்டச் சீரமைப்பு
தொகுதிட்டத்திற்கான அதிக செலவு; வழித்தடத்தின் நிலத்தடி பகுதியில் தேவையற்ற சுரங்கப்பாதைகள்; மற்றும் அப்பகுதியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை; ஆகியவை செலவைக் குறைக்க முடிவு செய்த காரணங்கள் என குறிப்பிடப்பட்டது.
மேலும் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
- ஆறு பெட்டிகள் கொண்ட தொடருந்துகளை மூன்று பெட்டிகள் கொண்ட தொடருந்துகளாக மாற்றுவது
- தொடருந்துகளை 42-இல் இருந்து 22-ஆகக் குறைப்பது
- நிலையங்களின் அளவைக் குறைப்பது
- விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைக் குறைப்பது
- பிற செலவுகளைக் குறைப்பது
கட்டுமான நிறைவு காலம், 2020-இல் இருந்து 2024 வரை நீட்டிக்கப்பட்டது.[7][8]
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
தொகு- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- CC13 எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
காட்சியகம்
தொகுகட்டுமானத்தில் உள்ள நிலையங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Tan, Danny. "LRT3 Shah Alam Line to start operations in Q3 2025 – delay from March target, physical work 95% complete". Paul Tan's Automotive News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
- ↑ "LRT3 to begin taking passengers by 3Q next year, says Loke". New Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
- ↑ "The first LRT3 train arrives in Malaysia". bharian.com.my. 21 June 2021.
- ↑ "LRT3 kini dikenali sebagai LRT Laluan Shah Alam - paultan.org". August 5, 2021.
- ↑ "Light Rail Transit Line 3 (LRT 3), Malaysia".
- ↑ Rapid KL (5 August 2021). "LRT3 kini dikenali sebagai LRT Laluan Shah Alam". Facebook. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
LRT3 atau dahulunya LRT Laluan Bandar Utama – Johan Setia, kini secara rasmi akan dikenali sebagai LRT Laluan Shah Alam
- ↑ "Six LRT3 stations shelved: Are you affected?". malaysiakini. 13 July 2018 இம் மூலத்தில் இருந்து 18 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191218054207/https://www.malaysiakini.com/news/433908.
- ↑ "Prasarana Malaysia Bhd to rationalise LRT3 project". New Straits Times. 26 July 2018. https://www.nst.com.my/business/2018/07/394721/prasarana-malaysia-bhd-rationalise-lrt3-project#:~:text=These%20provisional%20stations%20are%20Lien,Bukit%20Raja%20and%20Bandar%20Botanic..