காஜாங் தொடருந்து நிலையம்
காஜாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kajang Railway Station; மலாய்: Stesen Keretapi Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடம், காஜாங் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் அமைந்து உள்ளது. மலேசியாவில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றான காஜாங் பெருநகர மையத்தில் இருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது.[1]
காஜாங் | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KB06 KG35 Kajang Station | |||||||||||||||||||||||||||||||||||||||||
காஜாங் தொடருந்து நிலையம் (2017) | |||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | காஜாங் சிலாங்கூர் மலேசியா | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°58′58″N 101°47′25″E / 2.98278°N 101.79028°E | ||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | எம்ஆர்டி நிறுவனம் மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் எம்ஆர்டி நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | புலாவ் செபாங் ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை (KTM) 1 தீவு நடைமேடை (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 (KTM) 2 (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | KB06 மேற்பரப்பு KG35 உயர்த்தப்பட்டது PT01 உயர்த்தப்பட்டது | ||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | 1460 மகிழுந்துகள்; 600 விசையுந்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB06 KG35 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1897 (KTM) 17 சூலை 2017 (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 10 நவம்பர் 1995 (KTM) | ||||||||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 1995 (KTM) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | காஜாங் நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
கோலாலம்பூர் மோனோரெயில் சேவைக்கும், காஜாங் தொடருந்து நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கோலாலம்பூர் மோனோரெயில் சேவைக்கு ஒரு முனையமாகவும், புத்ராஜெயா வழித்தடற்கான இறுதி நிலையமாகவும் காஜாங் தொடருந்து நிலையம் செயல்படுகிறது. கோலாலம்பூர் மாநகரில் இருந்து காஜாங் பெருநகரம் 21 கி.மீ. தொலைவில், சற்றே அருகில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.
அத்துடன், மலேசியத் தலைநகரமான கோலாலம்பூருக்கு அடுத்த நிலையில் காஜாங் பெருநகரில் அதிகமான கல்விக் கழகங்களும் உள்ளன. அதனால் மாணவர்களின் நடமாட்டமும் அதிகமாகவே உள்ளது. மலேசியாவின் முன்னோடி நகரங்களில் காஜாங் நகரமும் ஒன்றாகும். காஜாங் நகரம் 1800-ஆம் ஆண்டுகளில் உருவானது.[2]
பொது
தொகுசேவைகள்
தொகுஇந்த நிலையத்திற்கு தற்போது, சிரம்பான் வழித்தடத்தின் கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள் சேவைகள் செய்கின்றன. 17 சூலை 2017 முதல், காஜாங் வழித்தடம் மூலமாக புத்ராஜெயா ஒற்றைத் தண்டூர்தி சேவையும் வழங்கப்படுகிறது.[3]
ஒற்றைத் தண்டூர்தி சேவைக்கான நடைபாதைகள், தற்போதைய நிலையத்திற்கு மேலே கட்டப்பட்டுள்ளன. அங்கு பேருந்து சேவைகள் உள்ளன. தொடருந்துகளின் மூலமாக நிலையத்தில் இறங்கும் பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரலாறு
தொகுஇந்த நிலையம் 1897-ஆம் ஆண்டில் முதன்முதலில் கட்டப்பட்டது. காஜாங் நகரத்தின் தொடக்கக்கால ஆண்டுகளில் இருந்து 20-ஆம் நூற்றாண்டு வரை நகரங்களுக்கு இடையிலான தொடருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவைகள் 1990-ஆம் ஆண்டுகளின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டன.[4]
அந்தக் கட்டத்தில் புக்கிட் சாலையை (Hill Road) ஒட்டிய புதிய நிலையம்; மேற்குப் பகுதியில் ரெகோ சாலையை (Reko Road) ஒட்டிய பழைய நிலையத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டது.
காஜாங் வழித்தடம்
தொகுதற்போதைய நிலையம் படிப்படியாக சில மறுவடிவமைப்புகளுக்கு உட்பட்டுள்ளது. கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளுக்கு வசதியாக ஒரு நடைபாதைத் தளம் நீளமாகவும் கட்டப்பட்டது. 8 சூலை 2011-இல், காஜாங் வழித்தடத்தின் இறுதி சீரமைப்பு வேலைகள் முடிவுற்றன. காஜாங் நிலையத்துடன் புதிதாக 31 நிலையங்களும் கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காஜாங் நிலையத்தின் கட்டுமான வேலைகள் ஆகஸ்டு 2012-இல் தொடங்கின; 17 சூலை 2017-இல் முடிக்கப்பட்டு, அதே நாளில் பொதுமக்களுக்கும் திறக்கப்பட்டது.
காஜாங் நகரம்
தொகுகாஜாங் (Kajang), மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்த நகரம் உலு லங்காட்மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் காஜாங் நகரமும் ஒன்றாகும்.[5]
2004-ஆம் ஆண்டு வரை, தாமான் பிரிமா சவுஜானா, சுங்கை சுவா, தாமான் காஜாங் பெர்டானா போன்ற பல புது குடியிருப்புகள் உருவாகியுள்ளன. அண்மைய காலங்களில், காஜாங் சுற்றுவட்டாரத்தில் டுவின் பால்ம்சு (Twin Palms), செரி பன்யான் நாட்டுப்புற மாளிகைகள் (Sri Banyan Country Heights), பிரிமா பாராமவுண்ட் போன்ற ஆடம்பர மனைத் திட்டங்களும் தோன்றியுள்ளன.
காஜாங் நகராட்சி
தொகுகாஜாங்கில் புதிதாக உருவாகி வரும் புறநகர்ப் பகுதிகளை ‘சில்க்’ விரைவுச்சாலை வழியாகச் சென்றடையலாம். காஜாங் நகரை காஜாங் நகராட்சி பராமரித்து வருகிறது.[6] காஜாங் நகரத்திலும், புறநகர்ப் பகுதியிலும் காஜாங் பொது மருத்துவமனை, செர்டாங் பொது மருத்துவமனை, புத்ராஜெயா பொது மருத்துவமனை போன்ற பொது மருத்துவமனைகள் உள்ளன. காஜாங் பொது மருத்துவமனை 1889-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மலேசியாவில் மிகப் பழமையான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.[7]
இருபத்து நான்கு மணிநேர மருத்துவச் சேவை வழங்கும் கிளினிக் மெடிவிரோன் பிரிமா சவுஜானா, காஜாங் பிளாசா மருத்துவ மையம், காஜாங் நிபுணத்துவ மருத்துவமனை, கொலாம்பியா ஆசியா மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.[8]
சிரம்பான் வழித்தடம்
தொகுசிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
ரவாங் தம்பின் இணைப்பு
தொகுஇந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
காட்சியகம்
தொகுகாஜாங் தொடருந்து நிலையக் காட்சிப் படங்கள் (2017 - 2023):
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Kajang MRT Station (GPS: 2.98315, 101.79022) is a station of the MRT Sungai Buloh-Kajang Line in Selangor. This is the terminus of the line. The station immediately before it is the Stadium Kajang MRT Station". பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
- ↑ Volunteers, Author Museum (15 July 2020). "History of Kajang: Kajang, like many towns on the west coast of the Peninsular, started as a mining settlement. An American prospector started a tin mine at Rekoh in 1855". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
{{cite web}}
:|first1=
has generic name (help) - ↑ "The Kajang KTM Komuter station is a Malaysian railway station located near the town of Kajang, Selangor. The station is situated 1 km south from Kajang's town centre and it currently serves the KTM Komuter and KTM Intercity train services". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
- ↑ "The Stadium Kajang MRT (Mass Rapid Transit) train service offers passengers is an easy and quick way to get to KL city centre with regular departures from the early morning until late in the evening". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
- ↑ Wolfram Alpha - Kajang - Kuala Lumpur Malaysia Distance. (09.01.2015)
- ↑ Taman Sri Banyan the flagship development by OSK Property Holdings Berhad is located within the premier vicinity of Country Heights Kajang.
- ↑ Kajang Hospital is a government-funded district hospital located in the eastern part of Kajang town in the district of Hulu Langat in Selangor, Malaysia. Kajang Hospital was initally founded in 1889.
- ↑ KPJ KAJANG has been in operation since 15th February 2006 and it is strategically located in Kajang town.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kajang Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kajang MRT Station | mrt.com.my
- Kuala Lumpur MRT & KTM Komuter Integrations