சூரியா கேஎல்சிசி

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் வணிக வளாகம்.

சூரியா கேஎல்சிசி (மலாய்: Suria KLCC; ஆங்கிலம்: Suria KLCC; சீனம்:陽光廣場) என்பது மலேசியா, கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள 6-அடுக்கு வணிக வளாகமாகும்.[1]

சூரியா கேஎல்சிசி
சூரியா கேஎல்சிசி (2019)
இருப்பிடம்:கோலாலம்பூர் மாநகர மையம், கோலாலம்பூர், மலேசியா
திறப்பு நாள்மே 1998
உருவாக்குநர்கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட்
முகாமைசூரியா கேஎல்சிசி நிறுவனம்
உரிமையாளர்சூரியா கேஎல்சிசி நிறுவனம் / CBRE உலகளாவிய முதலீட்டாளர்கள்
கடைகள் எண்ணிக்கை380
மொத்த வணிகத் தளப் பரப்பளவு140,000 m2 (1,500,000 sq ft)
தள எண்ணிக்கை6
www.suriaklcc.com.my

சூரியா கேஎல்சிசி, கோலாலம்பூரில் மிகவும் புகழ்பெற்ற வணிகத் தளமாக அறியப்படுகிறது. இந்தத் தளம், 300-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட முதன்மையான பல்கடை அங்காடி இடமாக விளங்குகிறது. இந்த வணிக வளாகம் கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ளது.[2]

பொது

தொகு
 
சூரியா கேஎல்சிசியின் நுழைவாயில் பகுதி

மே 1998-இல் திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம், கோலாலம்பூர் நகர மையத்தின் ஒரு பகுதியாக, பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிவாரத்தில் கட்டப்பட்டது.

சூரியா கேஎல்சிசி வளாகத்தில் இருந்து, கேஎல்சிசி பூங்கா மற்றும் பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபம் ஆகிய இரு வளாகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் சூரியா கேஎல்சிசி வளாகமும் உருவாக்கப்பட்டு உள்ளது.

வரலாறு

தொகு

"சூரியா" என்பது சமசுகிருதச் சொல்லான "சூரியா" என்பதில் இருந்து பெறப்பட்ட மலாய் மொழிச் சொல்லாகும்; அதாவது "சூரிய ஒளி" என்று பொருள்படும். சூரியா கேஎல்சிசி வணிக வளாகத்தின் தரை மாடி பிறை வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் மூன்று தரைநிலை வாயில்களும்; அம்பாங் சாலை, பி. ராம்லீ சாலை மற்றும் பெர்சியாரான் பெட்ரோனாஸ் (Persiaran Petronas) ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சூரியா கேஎல்சிசியின் தரைநிலை வாயில்களில் (Ground-level Exits) இருந்து பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபம் (Petronas Philharmonic Hall) மற்றும் பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபத்தின் நீரூற்றுப் பகுதிக்கும் (Lake Symphony) நேரடியாக அணுகலாம்.

நிர்வாகம்

தொகு

சூரியா கேஎல்சிசி என்பது சூரியா கேஎல்சிசி நிறுவனத்தின் (Suria KLCC Sdn. Bhd) கீழ் உள்ள மிகப்பெரிய சொத்துரிமை ஆகும்.

சூரியா கேஎல்சிசி நிறுவனத்தின் கீழ் அலமண்டா புத்ராஜெயா (Alamanda Putrajaya); மெஸ்ரா மால் திராங்கானு (Mesra Mall Terengganu) ஆகிய பிற சொத்துரிமைகளும் உள்ளன.[3]

சூரியா கேஎல்சிசி காட்சியகம்

தொகு

சூரியா கேஎல்சிசியில் நடைபெற்ற சில பெருநாள் நிகழ்ச்சிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

 
சூரியா கேஎல்சிசி அகலப்பரப்புக் காட்சி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Located in the heart of Kuala Lumpur, Suria KLCC is the most iconic premier shopping destination in Malaysia. A world-class complex of over 1.17 million square feet". Suria KLCC Mall. பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
  2. "Malaysia's iconic experiential shopping destination, located right below Petronas Twin Towers". Suria KLCC. பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
  3. Suria KLCC Sdn. Bhd. website

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியா_கேஎல்சிசி&oldid=4149879" இலிருந்து மீள்விக்கப்பட்டது