கோலாலம்பூர் கோபுரம்

கோலாலம்பூர் கோபுரம் அல்லது கேஎல் கோபுரம் (மலாய்; Menara Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Tower) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும். இதன் கட்டுமானம் 1995-இல் முடிவடைந்தது. இது தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்காகக் கட்டப்பட்டது.

கோலாலம்பூர் கோபுரம்
Kuala Lumpur Tower
Menara Kuala Lumpur
இரவில் கோலாலம்பூர் கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
வகைதொலைத்தொடர்பு, இசுலாமிய பிறை வானோக்கு நிலையம், துணிவுச்செயல் (வான் குதித்தல்), சுற்றுலா, பண்பாடு
இடம்கோலாலம்பூர், மலேசியா
கட்டுமான ஆரம்பம்1991
நிறைவுற்றது1995[1]
திறப்பு1 அக்டோபர் 1996
உயரம்
அலைக்கம்ப கோபுரம்421 m (1,381 அடி)
கூரை335 m (1,099 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை6
தளப்பரப்பு7,700 m2 (82,882 sq ft)
உயர்த்திகள்4
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கும்புலான் செனிரேகா Sdn. Bhd.

பொது

தொகு

தொலைத்தொடர்பிற்கான வானலை வாங்கிகள் 421 மீ (1,381 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. இவற்றின் இலத்திரனியல் கருவிகள் கொண்டுள்ள கட்டிடத்தொகுதியின் உயரம் 335 மீ (1,099 அடி)யில் உள்ளது.

இதன் கீழுள்ள கோபுரம் நேரடிக் கிணறு போல அமைந்துள்ளது. உணவருந்திக் கொண்டே நகரின் எழில்மிகு காட்சியைக் கண்டு களிக்க உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றும் உணவகம் உள்ளது. இதற்குச் செல்ல உயர்த்தி ஒன்று உள்ளது.

காட்சிமுனை

தொகு

படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்வதற்கு ஆண்டுதோறும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கோபுரம் இசுலாமிய மாதங்களைக் குறிக்கும் நிலவின் பிறைகளைக் காணவும் வானோக்கியாக பயன்படுகிறது.

பொதுமக்கள் சென்று காணக்கூடிய மிக உயர்ந்த காட்சிமுனையாக இது விளங்குகிறது. மேலும் இந்தக் கோபுரம் கோலாலம்பூரின் வான்வெளியை அடையாளப்படுத்தும் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரங்களுடன் போட்டியிடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Architecture & Technical Data. (n.d.). Menarakl.com.my. http://www.menarakl.com.my/index.cfm?sc=31 Retrieved in 19th October 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாலம்பூர்_கோபுரம்&oldid=4150454" இலிருந்து மீள்விக்கப்பட்டது