செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Petaling LRT Station; மலாய்: Stesen LRT Sri Petaling; சீனம்: 大城堡站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]

 SP18 
செரி பெட்டாலிங்
| எல்ஆர்டி
Sri Petaling LRT Station
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (2022)
பொது தகவல்கள்
அமைவிடம்செரி பெட்டாலிங்
கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°3′41″N 101°41′13″E / 3.06139°N 101.68694°E / 3.06139; 101.68694
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  செரி பெட்டாலிங் 
நடைமேடை2 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்திட்டத்தில்: மாஜு கேஎல் நிலையம்
பத்துமலை–புலாவ் செபாங்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை SP18  உயர்த்திய நிலை
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு SP18 
வரலாறு
திறக்கப்பட்டது11 சூலை 1998
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
புக்கிட் ஜாலில்
செந்தூல் தீமோர்
 
 ரேபிட் கேஎல் 
செரி பெட்டாலிங்
 
அவான் பெசார்
புத்ரா அயிட்ஸ்
அமைவிடம்
Map
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்

1998-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் (1998 Commonwealth Games) நினைவாக இந்த நிலையம் திறக்கப்பட்டது. கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் பகுதி வாழ் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது.[3]

பொது

தொகு

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் முன்பு காமன்வெல்த் நிலையம் (Komanwel station) என்று அழைக்கப்பட்டது.[4]

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.[5]

அமைவு

தொகு

அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.

அமைப்பு

தொகு
L1
பக்க நடைமேடை
நடைமேடை 1 செரி பெட்டாலிங் >>>  AG1   SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி;  AG18  அம்பாங் எல்ஆர்டி (→)  AG11   SP11  சான் சோவ் லின் (→)
நடைமேடை 2 செரி பெட்டாலிங் >>>  SP31  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←)
பக்க நடைமேடை
தரை தெருநிலை கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

தொகு

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியா

தொகு

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.

எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.

காட்சியகம்

தொகு

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "Sri Petaling LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Salak South area, Kuala Lumpur, Malaysia". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
  3. "Sri Petaling line LRT begins from Putra Heights LRT station and a trip from Putra Heights to Sentul Timur takes an estimated 74 minutes. It is medium-capacity light rapid transit line in the Klang Valley, Malaysia". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
  4. Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd (in மலாய்). Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
  5. "Sri Petaling LRT station near International Medical University (IMU)". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.

வெளி இணைப்புகள்

தொகு