புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் (ஆங்கிலம்: Bukit Jalil National Stadium; மலாய்: Stadium Nasional Bukit Jalil) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகர மையத்தின் தெற்கே அமைந்துள்ள தேசிய விளையாட்டு வளாகம் ஆகும்.

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்
Stadium Nasional Bukit Jalil
Bukit Jalil National Stadium
அமைவிடம்புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்
இருக்கை எண்ணிக்கை87,411[1]
ஆடுகள அளவு105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி)
Construction
கட்டப்பட்டது1 சனவரி 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-01-01)
திறக்கப்பட்டது11 சூலை 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-07-11)
சீரமைக்கப்பட்டது1998, 2015–2017
மீள்திறப்புசூலை 2017; 6 ஆண்டுகளுக்கு முன்னர் (2017-07)
கட்டுமான செலவுRM 1 Billion[2]

பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கான இந்த அரங்கம்; மலேசிய தேசிய கால்பந்து அணிக்குச் சொந்த மைதானம் ஆகும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் பல்நோக்கு அரங்கமான இந்த அரங்கம் 87,411 இருக்கைகள் கொண்டது.

இந்த அரங்கம் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரியது; ஆசியாவில் மூன்றாவது பெரியது; மற்றும் உலகின் எட்டாவது பெரியது ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு