அம்பாங் எல்ஆர்டி நிலையம்
அம்பாங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Ampang LRT Station; மலாய்: Stesen LRT Ampang; சீனம்: 安邦站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள தரைநிலை இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
அம்பாங் எல்ஆர்டி நிலையம் (16 மே 2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | அம்பாங் ஜெயா, சிலாங்கூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°9′1″N 101°45′36″E / 3.15028°N 101.76000°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா எம்ஆர்டி நிறுவனம் | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | அம்பாங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | AG18 தரை நிலை | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 4 | |||||||||||||||
தரிப்பிடம் | 1360 - கட்டணம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | AG18 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 (எல்ஆர்டி) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்பாங் (Taman Cahaya) நகரத்தின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அம்பாங் சாலையின் வழியில் உள்ள இந்த நிலையம், கோலாலம்பூரின் கிழக்கு எல்லையின் வெளிப்புறத்தில் உள்ளது.[3]
பொது
தொகுபயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (Ticketing Machines) மற்றும் சிஐஎம்பி வங்கியின் தன்னியக்க வங்கி இயந்திரம் (CIMB Bank ATM), பல்பொருள் விற்பனைக் கடை போன்றவை இந்த நிலையத்தில் உள்ளன. அம்பாங் பேருந்து நிலையம், வாடகைச் சீருந்து நிற்குமிடம், ஊர்தி நிறுத்தம் ஆகிய தரிப்பிடங்களை இந்த நிலையத்துடன் இணைக்கும் சாய்வுதளங்கள் 2012-ஆம் ஆண்டில் கட்டப்பட்டன.[4]
கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் உள்ளதைப் போன்ற பல மாடி கார் நிறுத்துமிடம் 2014-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஊர்தி தரிப்பிடத்தில் பணம் செலுத்துவதற்கு தொட்டு செல் மின்னணுக் கட்டண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு நாளைக்கு MYR 4 ரிங்கிட் என்ற ஒரு நிலையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வரலாறு
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த அம்பாங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையம் அண்டை நிலையமான சகாயா நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அம்பாங் சாலை
தொகுஅம்பாங் அல்லது அம்பாங் இலீர் (Ampang; Ampang Hilir) என்பது கோலாலம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும். தித்திவாங்சா மக்களவை தொகுதியின் கீழ் ஒரு பகுதியாக உள்ளது.[5]
அம்பாங் சாலை மற்றும் அம்பாங் இலீர் ஆகியவற்றில் அம்பாங் எனும் பெயர் இருப்பதை அதன் அடையாளமாகக் காணலாம். அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களின் தோற்றம்; கோலாலம்பூரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுத்தது.[6][7] அம்பாங் எனும் பெயர் மலாய் மொழியில் ’அணை’ என்று பொருள்படும்.[8]
அம்பாங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் அம்பாங் வழித்தடம் அமைக்கப்பட்டது.[9]
காட்சியகம்
தொகுஅம்பாங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Ampang LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Ampang Line in Ampang, Selangor, Malaysia, just outside the eastern boundary of Kuala Lumpur". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
- ↑ "The Ampang and Sri Petaling Lines run on a common route between Sentul Timur Station and Chan Sow Lin Station, serving central Kuala Lumpur and the city centre, effectively making all the stations on this section act as interchanges between both lines". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
- ↑ "From end to end there are a total of 18 stations along this LRT route with the journey from Sentul Timur to Ampang taking approximately 36 minutes". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
- ↑ D. Devika Bai (4 September 1995), "Where the Old World still beckons", New Straits Times, p. 1
- ↑ John Kam (31 July 1980), "What a magnificent heritage", New Straits Times Malaysia, p. 16
- ↑ Lam Seng Fatt (7 July 1985), "Art's big brother", Sundate, New Sunday Times Malaysia, p. 1
- ↑ J.M. Gullick (1983). The Story of Kuala Lumpur, 1857–1939. Eastern Universities Press (M). pp. 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9679080285.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Ampang LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Ampang LRT Station - mrt.com.my