தித்திவாங்சா

கோலாலம்பூர் மாநகரில் தித்திவாங்சா புறநகர்ப்பகுதி

தித்திவாங்சா (ஆங்கிலம்: Titiwangsa; மலாய்: Titiwangsa) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான இடமாகும். கோலாலம்பூர் மாந்கரத்தின் பழைய முக்கிய்மான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன.

தித்திவாங்சா
Titiwangsa
புறநகர்
தித்திவாங்சா ஏரி; தென்கிழக்கில் பெட்ரோனாஸ் கோபுரங்கள்
தித்திவாங்சா ஏரி; தென்கிழக்கில் பெட்ரோனாஸ் கோபுரங்கள்
தித்திவாங்சா Titiwangsa is located in மலேசியா மேற்கு
தித்திவாங்சா Titiwangsa
தித்திவாங்சா
Titiwangsa
ஆள்கூறுகள்: 3°10′40.30″N 101°42′24.38″E / 3.1778611°N 101.7067722°E / 3.1778611; 101.7067722
நாடு மலேசியா
கூட்டரசு கோலாலம்பூர்
தொகுதிசெத்தியா வாங்சா
அமைவுகோலாலம்பூர்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL)
 • கோலாலம்பூர் மாநகர முதல்வர் (Mayor)டத்தோ ஸ்ரீ மகாடி செ நிகா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு55100
மலேசியத் தொலைபேசி எண்+603-2, +603-4
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my

கோலாலம்பூர் பொது மருத்துவமனை தித்திவாங்சாவுக்கு தெற்கே அமைந்துள்ளது. தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதி, பெக்கெலிலிங், கம்போங் பாரு, தித்திவாங்சா ஏரிப் பூங்கா மற்றும் டத்தோ கெராமாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

கோலாலம்பூர் மாநகரின் வடகிழக்குப் புறநகரில் ஜாலான் குவாந்தான் சாலையில் அமைந்துள்ள பல முக்கியப் பகுதிகளில் தித்திவாங்சாவும் ஒன்றாகும். இங்குதான் தித்திவாங்சா ஏரிப் பூங்காவும் உள்ளது.

1960-ஆம் ஆண்டுகளில், கோலாலம்பூர் தனிக் கூட்டாசிப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், கோலாலம்பூரில் இருந்து பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகருக்கு, ஜாலான் குவாந்தான் சாலையில் தான் செல்வார்கள். அதனால்தான் இந்தச் சாலைக்கு ஜாலான் குவாந்தான் என்று பெயர் வந்தது.

வரலாறு தொகு

தித்திவாங்சா பகுதியில் ஒரு பெரிய மத்திய ஏரி உள்ளது. அதுதான் இந்த தித்திவாங்சா ஏரி. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இங்கு ஈயச் சுரங்க நடவடிக்கைகள் மிகையாக நடைபெற்றன. பின்னர் அந்த ஈயக் குட்டைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு பெரிய பூங்காவாக மாற்றப்பட்டது.[1]

தித்திவாங்சா ஏரிப் பூங்கா 46.13 ஹெக்டேர் அல்லது 114 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[2]

சுற்றுலா தலங்கள் தொகு

தித்திவாங்சா காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Titiwangsa Lake Gardens". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  2. "Titiwangsa Park". Visit KL. Tourism Unit, Kuala Lumpur City Hall. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தித்திவாங்சா&oldid=3877212" இலிருந்து மீள்விக்கப்பட்டது