கோலாலம்பூர் மாநகர முதல்வர்

கோலாலம்பூரின் உள்ளூர் அரசாங்கத்தின் தலைமை நிர்வாகி

கோலாலம்பூர் மாநகர முதல்வர் (ஆங்கிலம்: Mayor of Kuala Lumpur மலாய்: Datuk Bandar Kuala Lumpur) என்பவர் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரின் உள்ளூர் அரசாங்கத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

கோலாலம்பூர் மாநகர முதல்வர்
தற்போது
டத்தோ ஸ்ரீ மைமுனா முகமது சரீப்
Dato Seri Maimunah Mohd Sharif

17 ஏப்ரல் 2023 முதல்
கோலாலம்பூர் மாநகராட்சி
உறுப்பினர்கோலாலம்பூர் நகர ஆலோசனைக் குழு
அறிக்கைகள்கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு
அலுவலகம்28-ஆவது மாடி, DBKL கோபுரம் 1, ஜாலான் ராஜா லாவுட், 50350 கோலாலம்பூர்
நியமிப்பவர்மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சர்
பதவிக் காலம்இரு ஆண்டுகள்
அரசமைப்புக் கருவிகோலாலம்பூர் நகரச் சட்டம் 1971 [சட்டம் 59]
மத்தியக் கூட்டரசுச் சட்டம் 1960 [சட்டம் 190]
முதலாவதாக பதவியேற்றவர்லோக்மான் யூசோப்
உருவாக்கம்1 பெப்ரவரி 1972; 52 ஆண்டுகள் முன்னர் (1972-02-01)
இணையதளம்www.dbkl.gov.my

இவர் ஒவ்வோர் ஆண்டும், கோலாலம்பூர் மாநகர வரவு செலவு கணக்குகளைக் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் (Kuala Lumpur City Hall) சமர்ப்பிப்பார். ஆண்டு தோறும் ஏறக்குறைய 3 பில்லியன் ரிங்கிட் நிதியை நிர்வகிக்க வேண்டியது இவரின் பொறுப்பு ஆகும்.

2018-ஆம் ஆண்டின் வரவு செலவுக் கணக்கின் படி, கோலாலம்பூர் மாநகர முதல்வர், 2.905 பில்லியன் ரிங்கிட் நிதியை நிர்வகித்து உள்ளார்.

வரலாறு

தொகு

கோலாலம்பூர் மாநகர் மன்றம்

தொகு

1972 பெப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் மாநகரம் எனும் தகுதியைப் பெற்றது. மலாயா நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு மாநகரத் தகுதி பெற்ற முதல் நகரமாக விளங்கியது. அப்போது அதன் பெயர் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (மலாய்: Dewan Bandaraya Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur City Hall).

பின்னர், 1974 பெப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியானது.[1] 1978-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் புதிய தலைநகரமாகச் சா ஆலாம் நகரம் அறிவிக்கப்பட்டதும், கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலத் தலைநகரம் எனும் தகுதியில் இருந்து விடுபட்டது.

கோலாலம்பூர் மாநகர முதல்வர்

தொகு

ஏப்ரல் 1, 1961 முதல் கூட்டாட்சி தலைநகர ஆணையர் கூட்டாட்சித் தலைநகர ஆணையர் (மலாய்: Pesuruhjaya Ibu Kota Persekutuan; ஆங்கிலம்: Federal Capital Commissioner) என அழைக்கப்பட்ட ஒற்றை நகராட்சியரால் ஆளப்பட்டது.

பெப்ரவரி 1, 1972-இல் கோலாலம்பூருக்கு மாநகரமாக தகுதி வழங்கப்பட்டதும், நிர்வாக அதிகாரம் மாநகர முதல்வர் எனும் மேயருக்கு (மலாய்: Datuk Bandar; ஆங்கிலம்: Mayor) வழங்கப்பட்டது.[2]

மாநகர முதல்வர் நியமனம்

தொகு

மாநகர முதல்வரை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாட்சிப் பகுதிகளுக்கான அமைச்சர் நியமிக்கின்றார். 1970-இல் மாநகர உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. அதில் இருந்து நியமன முறைமை அமலில் உள்ளது.

மே 14, 1990-இல் கோலாலம்பூர் உள்ளாட்சி மன்றத்தின் 100 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அப்போது கோலாலம்பூருக்கான கொடியும்; கோலாலம்பூர் மாநகருக்கான பாடலும் அறிமுகப் படுத்தப்பட்டன.

மாநகர முதல்வர்கள் பட்டியல்

தொகு

1972 முதல் 13 மாநகர முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். தற்போதைய மாநகர முதல்வராக மகதி சே நிகா உள்ளார்; இவர் 2020-இல் பதவியேற்றார்.[3] முன்னாள் மேயர்களின் பட்டியல்:

# மேயர் தொடக்கம் கால முடிவு சேவைக் காலம்
1. லோக்மான் யூசோப் 1 பெப்ரவரி 1972 (1972-02-01) 15 மே 1972 (1972-05-15) 0 ஆண்டுகள், 104 நாட்கள்
2. யாகூப் லத்தீப் 16 மே 1972 (1972-05-16) 31 சனவரி 1981 (1981-01-31) 8 ஆண்டுகள், 260 நாட்கள்
3. எலியாசு ஒமார் 1 பெப்ரவரி 1981 (1981-02-01) 16 நவம்பர் 1992 (1992-11-16) 11 ஆண்டுகள், 289 நாட்கள்
4. மசலன் அகமது 17 நவம்பர் 1992 (1992-11-17) 13 திசம்பர் 1995 (1995-12-13) 3 ஆண்டுகள், 26 நாட்கள்
5. கமருசமான் சரீப் 14 திசம்பர் 1995 (1995-12-14) 13 திசம்பர் 2001 (2001-12-13) 5 ஆண்டுகள், 364 நாட்கள்
6. மொகமது சயீத்
மொகமது தவ்பெக்
14 திசம்பர் 2001 (2001-12-14) 13 திசம்பர் 2004 (2004-12-13) 2 ஆண்டுகள், 365 நாட்கள்
7. ருசுலின் அசன் 14 திசம்பர் 2004 (2004-12-14) 13 திசம்பர் 2006 (2006-12-13) 1 ஆண்டு, 364 நாட்கள்
8. அப். அக்கீம் போர்கன் 14 திசம்பர் 2006 (2006-12-14) 13 திசம்பர் 2008 (2008-12-13) 1 ஆண்டு, 365 நாட்கள்
9. அகமது புவாட்
இசுமாயில்
14 திசம்பர் 2008 (2008-12-14) 17 சூலை 2012 (2012-07-17) 3 ஆண்டுகள், 216 நாட்கள்
10. அகமது பெசல் தலிப் 18 சூலை 2012 (2012-07-18) 17 சூலை 2015 (2015-07-17) 2 ஆண்டுகள், 364 நாட்கள்
11. மொகமது அமின்
நோர்டின் அப்துல் அசீசு
18 சூலை 2015 (2015-07-18) 30 செப்டம்பர் 2018 (2018-09-30) 3 ஆண்டுகள், 74 நாட்கள்
12. நார் இசாம்
அகமத் டலான்
1 அக்டோபர் 2018 (2018-10-01) 30 செப்டம்பர் 2020 (2020-09-30) 1 ஆண்டு, 365 நாட்கள்
13. மகாடி செ நிகா 1 அக்டோபர் 2020 (2020-10-01) 31 மார்ச்சு 2023 (2023-03-31) 2 ஆண்டுகள், 181 நாட்கள்
14. கமருல்ஜமான் மாட் சாலே 17 ஏப்ரல் 2023 (2023-04-17) பதவியில்
உள்ளார்
1 ஆண்டு, 250 நாட்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuala Lumpur". Columbia Encyclopedia, Sixth Edition 2007. Columbia University Press. பார்க்கப்பட்ட நாள் 6 December 2007.
  2. "Kuala Lumpur City Hall". Ministry of Federal Territories and Urban Wellbeing. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.dbkl.gov.my/index.php?option=com_content&view=article&id=39&Itemid=174&lang=en

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dewan Bandaraya Kuala Lumpur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க

தொகு