கோலாலம்பூர் மாநகராட்சி

மலேசியா, கோலாலம்பூர் மாநகரை நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றம்.
(கோலாலம்பூர் மாநகர் மன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலாலம்பூர் மாநகராட்சி அல்லது கோலாலம்பூர் மாநகர் மன்றம்; (மலாய்: Dewan Bandaraya Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur City Hall; சீனம்: 吉隆坡市政局); (சுருக்கம்: DBKL) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரை நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றமாகும்.[1]

கோலாலம்பூர் மாநகராட்சி

Dewan Bandaraya Kuala Lumpur
Kuala Lumpur City Hall
வகை
வகை
உள்ளாட்சி அமைப்பு
தலைமை
மகாடி சே நிகா
(Mahadi Che Ngah)
1 அக்டோபர் 2020
கூடும் இடம்
ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கோலாலம்பூர் மாநகர் மண்டபம்

பொதுநலம் மற்றும் சுகாதாரம், குப்பை நீக்கம் மற்றும் மேலாண்மை, நகரத் திட்டமிடல், சூழல் பாதுகாப்பு, கட்டிடப் பாதுகாப்பு, சமூகப் பொருளியல் மேம்பாடு, மாநகர்க் கட்டமைப்பின் பொதுப் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றிற்கு இந்த மாநகர மன்றம் பொறுப்பாகும். இதற்கான செயலாற்று அதிகாரம் மாநகர் மன்றத்தின் மேயருக்கு (Datuk Bandar) வழங்கப்பட்டு உள்ளது;

1970-ஆம் ஆன்டு தொடங்கி உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதால் கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம், ஒரு மேயரைக் கோலாலம்பூர் மாநகருக்கு மூன்று ஆண்டு பதவிக் காலத்திற்கு நியமிக்கின்றது.[2] கோலாலம்பூரின் தற்போதைய மேயராக மகாடி சே நிகா என்பவர் பொறுப்பில் உள்ளார்; இவர் 2020 அக்டோபர் 1-ஆம் தேதி பதவி ஏற்றார்.[3]

இந்த மாநகர மன்றத்தின் தலைமை அலுவலகம் ஜாலான் ராஜா லவுட்டில் உள்ள கோலாலம்பூர் மாநகர மன்றக் கட்டிடத்தில் இயங்குகின்றது. மற்றும் ஒரு கட்டிடம் மெனாரா டி.பி.கே.எல் .2 (Menara DBKL 2) கட்டிடம்; இதன் பின்புறம் உள்ளது; மேலும் ஒரு கட்டிடம், மெனாரா டி.பி.கே.எல். 3 (Menara DBKL 3) ஜாலான் ராஜா அப்துல்லாவில் உள்ளது. கோலாலம்பூர் மாந்கர மன்றத்திற்கு கோலாலம்பூரில் 11 கிளை அலுவலகங்கள் உள்ளன.

வரலாறு

தொகு

இந்த அமைப்பு முன்னதாக கோலாலம்பூர் நகராட்சி மன்றம் (மலாய்: Majlis Perbandaran Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Municipal Council) என்று அழைக்கப்பட்டு வந்தது. கோலாலம்பூர் நகரம், பிரித்தானியக் குடியேற்றக் காலங்களிலும்; நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் மலேசிய நாட்டின் தலைநகரமாகவும் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.

ஏப்ரல் 1, 1961-இல் இந்த அமைப்பின் பெயர் கோலாலம்பூர் கூட்டாட்சி தலைநகர் ஆணையம், (மலாய்: Suruhanjaya Ibu Kota Persekutuan; ஆங்கிலம்: Kuala Lumpur Federal Capital Commission) என மாற்றப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர் மன்றம்

தொகு

கோலாலம்பூர் பெப்ரவரி 1, 1972-இல் மாநகரம் எனும் தகுதியைப் பெற்றது. விடுதலைக்குப் பிறகு மலேசியாவில் இந்தத் தகுதி பெற்ற முதல் குடியிருப்பாகக் கோலாலம்பூர் விளங்கியது. அப்போது இதன் பெயர் கோலாலம்பூர் மாநகர் மன்றம்(மலாய்: Dewan Bandaraya Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur City Hall).

பின்னர், பெப்ரவரி 1, 1974-இல் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியானது.[4] 1978-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் புதிய தலைநகரமாக சா ஆலாம் அறிவிக்கப்பட்டதும், கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலத் தலைநகரம் எனும் தகுதியை இழந்தது.

கோலாலம்பூர் மாநகர முதல்வர்

தொகு

ஏப்ரல் 1, 1961 முதல் கூட்டாட்சி தலைநகர ஆணையர் கூட்டாட்சித் தலைநகர ஆணையர் (மலாய்: Pesuruhjaya Ibu Kota Persekutuan; ஆங்கிலம்: Federal Capital Commissioner) என அழைக்கப்பட்ட ஒற்றை நகராட்சியரால் ஆளப்பட்டது. பெப்ரவரி 1, 1972-இல் மாநகரமாகத் தகுதி வழங்கப்பட்ட பின்னர், நிர்வாக அதிகாரம் மாநகர முதல்வர் எனும் மேயருக்கு (மலாய்: Datuk Bandar; ஆங்கிலம்: Mayor) வழங்கப்பட்டது.[5]

மாநகர முதல்வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாட்சிப் பகுதிகளுக்கான அமைச்சர் நியமிக்கின்றார். 1970-இல் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இடைநிறுத்தம் ஏற்பட்டதில் இருந்து இந்த முறைமை நிலுவையில் உள்ளது.[2]

மே 14, 1990-இல் கோலாலம்பூர் உள்ளாட்சி மன்றத்தின் 100 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அச்சமயத்தில் கோலாலம்பூருக்கான கொடியும் நகரப் பண்ணும் அறிமுகப் படுத்தப்பட்டன.

கோலாலம்பூர் மாநகர முதல்வர்கள் பட்டியல்

தொகு

1972 முதல் 13 மாநகர முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். தற்போதைய மாநகர முதல்வராக மகதி சே நிகா உள்ளார்; இவர் 2020-இல் பதவியேற்றார்.[6] முன்னாள் மேயர்களின் பட்டியல்:

# பெயர் பதவியில்
1. லோக்மான் யூசோப் 1972
2. யாகூப் லத்தீப் 1973 - 1983
3. எலியாசு ஒமார் 1983 - 1992
4. மசலன் அகமது 1992 - 1995
5. கமருசமான் சரீப் 1995 - 2001
6. மொகமது சயீத் மொகமது தவ்பெக் 2001 - 2004
7. ருசுலின் அசன் 2004 - 2006
8. அப். அக்கீம் போர்கன் 2006 - 2008
9. அகமது புயத் இசுமாயில் 2008 - 2012
10. அகமது பெசல் தலிப் 2012 - 2015
11. மொகமது அமின் நோர்டின் அப்துல் அசீசு 2015 - 2018
12. நார் இசாம் அகமத் டலான் 2018 - 2020
13. மகதி சே நிகா 2020 - (தற்சமயம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuala Lumpur City Hall is a Local Authority that conducts governance work in Kuala Lumpur, its early history began with the establishment of the Kuala Lumpur Sanitary Board in 1890 and is the first local authority that has been established in the country". Laman Web MKN. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
  2. 2.0 2.1 "Malaysia's towns and cities are governed by appointed mayors". City Mayors. 2006. http://www.citymayors.com/government/malaysia_government.html. பார்த்த நாள்: 9 October 2006. 
  3. "Dewan Bandaraya Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
  4. "Kuala Lumpur". Columbia Encyclopedia, Sixth Edition 2007. Columbia University Press. பார்க்கப்பட்ட நாள் 6 December 2007.
  5. "Kuala Lumpur City Hall". Ministry of Federal Territories and Urban Wellbeing. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://www.dbkl.gov.my/index.php?option=com_content&view=article&id=39&Itemid=174&lang=en

மேலும் காண்க

தொகு

கூட்டாட்சிப் பகுதி (மலேசியா)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாலம்பூர்_மாநகராட்சி&oldid=4149942" இலிருந்து மீள்விக்கப்பட்டது