தித்திவங்சா மக்களவைத் தொகுதி

தித்திவங்சா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Titiwangsa; ஆங்கிலம்: Titiwangsa Federal Constituency; சீனம்: 蒂蒂旺沙国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P119) ஆகும்.

தித்திவங்சா (P119)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Titiwangsa (P119)
Federal Constituency in Kuala Lumpur
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில்
தித்திவங்சா மக்களவைத் தொகுதி

மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை122,096 (2022)[1]
வாக்காளர் தொகுதிதித்திவங்சா தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்; செத்தியா வங்சா, பெக்கெலிலிங், கம்போங் பாரு, புக்கிட் செத்தியா வங்சா, தித்திவங்சா ஏரிப் பூங்கா
பரப்பளவு15 ச.கி.மீ[2]
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாரிசான்
மக்களவை உறுப்பினர்ஜொகாரி அப்துல் கனி
(Johari Abdul Ghani)
மக்கள் தொகை122,096 [3]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]




2022-இல் தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (73.4%)
  சீனர் (16.5%)
  இதர இனத்தவர் (1.3%)

தித்திவங்சா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து தித்திவங்சா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தித்திவங்சா

தொகு

தித்திவங்சா, கோலாலம்பூர் மாநகரத்தில், மேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். கோலாலம்பூர் மருத்துவமனை, தித்திவங்சாவுக்கு தெற்கே அமைந்துள்ளது. தித்திவங்சா மக்களவைத் தொகுதி, பெக்கெலிலிங், கம்போங் பாரு, மற்றும் டத்தோ கெராமாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

கோலாலம்பூர் மாநகரத்தின் பழைய முக்கிய்மான கட்டிடங்கள் இங்கு உள்ளன. கோலாலம்பூர் மாநகரின் வடகிழக்குப் புறநகரில் குவாந்தான் சாலையில் அமைந்துள்ள பல முக்கியப் பகுதிகளில் தித்திவங்சாவும் ஒன்றாகும். தித்திவங்சா பகுதியில் ஒரு பெரிய தித்திவங்சா ஏரிப் பூங்கா உள்ளது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இங்கு ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அதிகமாக நடைபெற்றன. பின்னர் அந்த ஈயக் குட்டைகள் சுத்தம் செய்யப்பட்டு ஒரு பெரிய பூங்காவாக மாற்றப்பட்டன.[5]

தித்திவங்சா சுற்றுலா தலங்கள்

தொகு

தித்திவங்சா மக்களவைத் தொகுதி

தொகு
தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் செதாபாக் மக்களவைத் தொகுதியில் இருந்து தித்திவங்சா தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P098 1986–1990 சுலைமான் முகமட்
(Suleiman Mohamed)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P107 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P119 2004–2008 அசுதமான் அப்துல் அசீசு
(Astaman Abdul Aziz)
12-ஆவது மக்களவை 2008–2011 லோ லோ முகமட் கசாலி
(Lo' Lo' Mohamad Ghazali)
பாக்காத்தான் ராக்யாட்
(பாஸ்)
2011–2013 காலி[N 1]
13-ஆவது மக்களவை 2013–2018 ஜொகாரி அப்துல் கனி
(Johari Abdul Ghani)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018–2020 ரீனா அருண்
(Rina Harun)
பாக்காத்தான்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது ஜொகாரி அப்துல் கனி
(Johari Abdul Ghani)
பாரிசான் நேசனல்
(அம்னோ)

தித்திவங்சா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
80,747
வாக்களித்தவர்கள்
(Turnout)
61,450 76.10%   -6.46%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
60,858 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
235
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
357
பெரும்பான்மை
(Majority)
4,632 7.61%   -0.60%
வெற்றி பெற்ற கட்சி:   பாரிசான்
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதிகள்; மலேசிய அரசாங்க
அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[6]
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7]

தித்திவங்சா மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
சின்னம் வேட்பாளர் கட்சி தொகுதியின்
மொத்த வாக்குகள்
கிடைத்த
வாக்குகள்
% ∆%
  ஜொகாரி அப்துல் கனி
(Johari Abdul Ghani)
பாரிசான் 60,858 25,042 41.15% +2.05%  
  காலிட் சமாட்
(Khalid Samad)
பாக்காத்தான் - 20,410 33.54% -13.77%  
  ரொசுனி அடாம்
(Rosni Adam)
பெரிக்காத்தான் - 14,518 23.86% +23.85%  
  கைருதீன் அபு அசான்
(Khairuddin Abu Hassan)
உள்நாட்டு போராளிகள் கட்சி
(GTA / PEJUANG)
- 888 1.46% +1.46  
  1. மக்களவை உறுப்பினர் லோ லோ முகமட் கசாலி காலமானதால், 17 சூலை 2011 முதல் மலேசியப் பொதுத் தேர்தல், 2013 வரை, இந்தத் தொகுதி காலியாக இருந்தது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Titiwangsa Lake Gardens". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  6. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு