சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம்

சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் அல்லது சுபாங் ஆலாம் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Subang Alam LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 梳邦阿南) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]

 KJ36 
சுபாங் ஆலாம்

Subang Alam LRT Station
சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் (2021)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Subang Alam (மலாய்)
梳邦阿南 (சீனம்)
அமைவிடம்பெர்சியாரான் புத்ரா பெர்தானா, சுபாங் ஆலாம், செக்சன் 28, 40400 சா ஆலாம்
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°00′35″N 101°34′20″E / 3.00972°N 101.57222°E / 3.00972; 101.57222
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Rapid_KL_Logo ரேபிட் கேஎல்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம் (115) கட்டணம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து (20) இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ36 
வரலாறு
திறக்கப்பட்டது30 சூன் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
ஆலாம் மேகா
கோம்பாக் எல்ஆர்டி
 
கிளானா ஜெயா வழித்தடம்
 
புத்ரா அயிட்ஸ்
முடிவு

இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஆலாம், அரோமா துரோப்பிக்கா (Aroma Tropika) ஆகிய சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[4] இந்த நிலையம் ஆலாம் மேகா தேசியப் பள்ளி 2-க்கு (Sekolah Kebangsaan Alam Megah 2) அருகில் அமைந்துள்ளது.

அமைவு

தொகு

கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது.

சுபாங் ஆலாம் நிலையம் சா ஆலாம், சுபாங் ஆலாம் பகுதியில் (Subang Alam) அமைந்து இருப்பதால், சுபாங் ஆலாம் எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.

சா ஆலாம் மாநகராட்சி

தொகு

சா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 ​​திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது.

கிளானா ஜெயா வழித்தடம்

தொகு

கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]

ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு

தொகு

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.

கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6]

பேருந்து சேவைகள்

தொகு
பேருந்து தொடக்கம் இலக்கு பயண வழி
 T758   KJ36  சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் செக்சன் 28, தாமான் ஆலாம் மேகா சா ஆலாம்  KJ37  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்[7]

குறிப்பு: இந்தப் பேருந்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
  3. "Subang Alam LRT station serving Subang Alam & Aroma Tropika neighborhoods". klia2 info. 10 October 2017.
  4. "Wawasan LRT Station – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
  5. "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  6. Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/. 
  7. "T758 STATION LRT SUBANG ALAM– ALAM MEGAH". myrapidbus.prasarana.com.my.

வெளி இணைப்புகள்

தொகு