ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்
ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆலாம் மேகா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Alam Megah LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 壮丽的自然风光) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]
ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் (2021) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Alam Megah (மலாய்) 壮丽的自然风光 (சீனம்) | ||||||||||
அமைவிடம் | பெரானாங் சாலை 27/14A, தாமான் பூங்கா நெகாரா, செக்சன் 27, ஆலாம் மேகா, 40400 சா ஆலாம் சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°01′24.1″N 101°34′19.6″E / 3.023361°N 101.572111°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | (196) கட்டணம் | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | (20) இலவசம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ35 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், தாமான் பூங்கா நெகாரா, செக்சன் 27, ஆலாம் மேகா; போன்ற சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[4] இந்த நிலையம் மெயின் பேலஸ் வணிக வளாகத்திற்கு (Main Place Mall) அருகில் அமைந்துள்ளது.
அமைவு
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது.
ஆலாம் மேகா நிலையம் சா ஆலாம், செக்சன் 27, ஆலாம் மேகா பகுதியில் (Alam Megah) அமைந்து இருப்பதால், ஆலாம் மேகா எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
சா ஆலாம் மாநகராட்சி
தொகுசா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது.
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
தொகுஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6]
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு | பயண வழி |
---|---|---|---|
T757 | KJ35 யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம் | செக்சன் 27, சா ஆலாம் | சா ஆலாம் மாநகராட்சி |
752 | KJ37 SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் | சா ஆலாம் பேருந்து நிலையம் (செக்சன் 14) | KJ35 ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Alam Megah LRT Station – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
- ↑ "Wawasan LRT Station – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Alam Megah LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Alam Megah LRT station