சா ஆலாம் மாநகராட்சி
சா ஆலாம் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Shah Alam (MBSA); ஆங்கிலம்: Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். அத்துடன், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஓர் ஆணயமும் ஆகும்.
சா ஆலாம் மாநகராட்சி Shah Alam City Council Majlis Bandaraya Shah Alam مجليس بندرايا شاه عالم | |
---|---|
சா ஆலாம் மாநகராட்சியின் சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 7 திசம்பர் 1978 |
முன்பு | சா ஆலாம் நகராட்சி (Shah Alam Municipal Council) |
தலைமை | |
மாநகர முதல்வர் | |
தலைமை செயலாளர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
அரசியல் குழுக்கள் | உறுப்பினர்கள்: |
ஆட்சிக்காலம் | 2024-2025 |
குறிக்கோளுரை | |
அழகு, அறிவு (Beautiful, Brilliant), (Indah Bestari) | |
கூடும் இடம் | |
சா ஆலாம் மாநகராட்சி தலைமையகம், Wisma MBSA, 40000 சா ஆலாம், சிலாங்கூர், மலேசியா | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
7 திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. சிலாங்கூரின் தலைநகராக சா ஆலாம் அறிவிக்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் தான், சா ஆலாம் மாநகராட்சியின் தோற்றமும் அறிவிக்கப்பட்டது.[4]
இதன் தலைமையகம் சிலாங்கூர், சா ஆலாம், பெர்சியாரன் பெர்பண்டாரான் (Persiaran Perbandaran, Shah Alam) சாலையில் அமைந்துள்ளது.[4]
பொது
தொகுமலேசியாவில் செயல்படும் மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த சா ஆலாம் மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சா ஆலாம் மாநகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது.[5]
வரலாறு
தொகு1963-ஆம் ஆண்டில் சா ஆலாம் ஒரு நகரமாக உருவாக்கப்பட்டபோது, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (Selangor State Development Corporation) (PKNS) கீழ் சா ஆலாம் நகர வாரியம் (Shah Alam Town Board) நிறுவப்பட்டது. 7 டிசம்பர் 1978-இல் சா ஆலாம் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சா ஆலாம் நகர வாரியம்; சா ஆலாம் நகராட்சி மன்றம் (Shah Alam Municipal Council) என தகுதி உயர்த்தப்பட்டது.
சா ஆலாம் நகராட்சி மன்றத் தலைவராக சிலாங்கூர் மாநிலத்தின் மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 சனவரி 1979-இல், சா ஆலாம் நகராட்சி மன்றம் 123 பணியாளர்களுடன் சா ஆலாம் பிரிவு 3-இல் உள்ள ஒரு கடைமனையியில் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1981-இல் பிரிவு சா ஆலாம் பிரிவு 14-இல் உள்ள நகராட்சி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1988-இல், அதன் சொந்த 28 மாடிக் கட்டிடத்திற்கு மாறிச் சென்றது.[6]
மாநகராட்சியின் தலைவர்கள்
தொகுசா ஆலாம் மாநகராட்சியின் தலைவர்கள் பட்டியல்:[7]
# | தலைவர்களின் பெயர் | பணிக்காலம் |
---|---|---|
2. | சாலமன் செலமாட் | 2002 – 2004 |
3. | ரம்லி மகமூத் | 2004 - 2006 |
4. | ரம்லான் ஒசுமான் | 2006 - 2008 |
5. | மசுலான் முகமட் நூர் | 2008 - 2011 |
6. | முகமது ஜாபர் முகமது அதான் | 2012 - 2015 |
7. | அகமத் சகாரின் முகமது சாத் | 2015 - 2018 |
8. | அரிஸ் காசிம் | 2018 - 13 ஊன் 2021 |
9. | சமானி அகமத் மன்சோர் | 14 சூன் 2021 - 8 அக்டோபர் 2022 |
10. | நோர் புவாட் அப்துல் அமீட் | 1 திசம்பர் 2022 - 27 அக்டோபர் 2023 |
11. | சிரமி தர்மன் | நடிப்பு : 27 அக்டோபர் 2023 - தற்போது வரையில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tuan Haji Ir. Cheremi bin Haji Tarman". Majlis Bandaraya Shah Alam. பார்க்கப்பட்ட நாள் 30 April 2024.
- ↑ "Rashidi Timbalan Datuk Bandar Shah Alam baharu". Sinar Harian.
- ↑ "Cheremi Tarman sworn in as Shah Alam's acting mayor". The Star. 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
- ↑ 4.0 4.1 "The administration of Shah Alam began with the establishment of MPSA on 7 December 1978 in accordance with Act 71, the Local Government Act. The establishment of MPSA coincided with the declaration of the city of Shah Alam as the capital of Selangor". பார்க்கப்பட்ட நாள் 30 April 2024.
- ↑ Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
- ↑ "Shah Alam City Council : Shah Alam City Council terletak di Tingkat 1 Wisma MBSA, Persiaran Perbandaran, 40000, Shah Alam, Selangor". newpages.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 April 2024.
- ↑ "Official Website Of Shah Alam City Council". www.mbsa.gov.my.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Shah Alam City Council தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- MBSA official web site