கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம்

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம்

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மையம் (மலாய்; Pusat Dagangan Dunia Kuala Lumpur அல்லது Pusat Dagangan Dunia Putra; ஆங்கிலம்: World Trade Centre Kuala Lumpur; அல்லது Putra World Trade Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (PWTC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும்.

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம்
World Trade Centre Kuala Lumpur
Pusat Dagangan Dunia Kuala Lumpur
Map
மாற்றுப் பெயர்கள்WTC KL, World Trade Centre KL, Putra World Trade Centre
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டி முடிக்கப்பட்டது
வகைமாநாடு மற்றும் கண்காட்சி மையம்
கட்டிடக்கலை பாணிநவீன கட்டிடக்கலை, பின்நவீனத்துவ கட்டிடக்கலை
இடம்துன் இசுமாயில் சாலை, சௌக்கிட்
கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°10′04″N 101°41′29″E / 3.167778°N 101.691389°E / 3.167778; 101.691389
கட்டுமான ஆரம்பம்1981
நிறைவுற்றது1984
திறப்பு26 செப்டம்பர்1985
உரிமையாளர்[3]
மேலாண்மைபுத்ரா வணிக நிறுவனம்
Putrade Property Management Sdn Bhd
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு1.70 மில்லியன் சதுர அடி[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)டத்தோ இக்மால் இசாம் அல்பக்ரி
Datuk Dr. Ikmal Hisham Albakri [2]
வலைதளம்
worldtradecentrekl.com.my

இந்த வணிக மையம் 235,000 சதுர அடி கண்காட்சி அரங்கத்துடன் 1.7 மில்லியன் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.[4].[1]

பொது

தொகு

இந்த வணிக மையம், மலேசியாவின் வரலாற்று மாநாட்டு மையமாகக் கருதப்படுகிறது. மேலும், பன்னாட்டு அளவிலான மாநாடுகள், இசைக் கச்சேரிகள், உள்ளூர்த் திருமணங்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிற்சிகள், கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒரு விருப்பமான இடமாகவும் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வணிக மையத்தின் கட்டுமானம் 1981-இல் தொடங்கப்பட்டு 1984-இல் நிறைவடைந்தது; அதிகாரப் பூர்வமாக 26 செப்டம்பர் 1985 அன்று திறக்கப்பட்டது.[5]

மலேசியாவின் தலையாய அரசியல் கட்சிகளில் ஒன்றான அம்னோவின் (UMNO) பொதுக் கூட்டங்கள், இந்த மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அமைவு

தொகு

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம், கோலாலம்பூர் நகரின் வடமேற்கு மூலையில் உள்ள புத்ரா சாலையில் (Jalan Putra) அமைந்துள்ளது. பத்து ஆறு மற்றும் கோம்பாக் ஆறு ஆகிய ஆறுகளின் சங்கமம் மாநாட்டு மையத்திற்குப் பின்னால் உள்ளது.

கோலாலம்பூர் செரி பசிபிக் தங்கும் விடுதி, சன்வே புத்ரா தங்கும் விடுதி, கோலாலம்பூர் டைனஸ்டி தங்கும் விடுதி மற்றும் கோலாலம்பூர் செரட்டன் இம்பீரியல் தங்கும் விடுதி போன்ற பல தங்கும் விடுதிகளுக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[6]

போக்குவரத்து

தொகு

  அம்பாங் வழித்தடம்;   செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்களில் உள்ள  SP4 ,  AG4  புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையத்திற்கு இந்த வணிக மையத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

  பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்;   தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ள  KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்; ஒரு பாதசாரி மேம்பாலம் வழியாக இந்த வணிக மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

காட்சியகம்

தொகு

புத்ரா பன்னாட்டு வணிக மையத்தின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Putra World Trade Centre (PWTC)". Time Out Kuala Lumpur. 23 April 2014. https://www.timeout.com/kuala-lumpur/things-to-do/putra-world-trade-centre-pwtc. பார்த்த நாள்: 19 October 2018. 
  2. "PWTC architect dies at 75". The Star. 15 January 2006. https://www.thestar.com.my/news/nation/2006/01/15/pwtc-architect-dies-at-75/. பார்த்த நாள்: 19 October 2018. 
  3. "PWTC, nilai sentimental Ku Li" (in ms). Harian Metro. 30 November 2016. https://www.hmetro.com.my/node/185838. பார்த்த நாள்: 19 October 2018. 
  4. "World Trade Centres Association lauds Madani Economy initiatives". thesun.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
  5. "MIFF - Malaysian International Furniture Fair in Kuala Lumpur Malaysia". www.tradeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
  6. "Sheraton Imperial Kuala Lumpur Hotel. Rates from MYR349". sheraton-imperial-kl.hotel-rez.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.

வெளி இணைப்புகள்

தொகு