செராஸ் எல்ஆர்டி நிலையம்
செராஸ் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cheras LRT Station; மலாய்: Stesen LRT Cheras; சீனம்: 蕉赖轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள தாழ்ந்தமாடி (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
செராஸ் எல்ஆர்டி நிலையம் (2024) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
வேறு பெயர்கள் | Cheras LRT station 蕉赖轻轨站 | |||||||||||||||
அமைவிடம் | சாலை 3/12, சுங்கை பீசி கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°6′45″N 101°42′51″E / 3.11250°N 101.71417°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | செரி பெட்டாலிங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
இணைப்புக்கள் | KG21 காக்ரேன் எம்ஆர்டி | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | தாழ்ந்தமாடி | |||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP12 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 11 சூலை 1998 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
கோலாலம்பூர் மாநகரத்தின் அருகிலுள்ள செராஸ் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நிலையம் செரி மாஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டது.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செராஸ் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது.[3]
அமைவு
தொகுசெராஸ் என்று இந்த நிலையத்தின் பெயர் இருந்தபோதிலும், இந்த செராஸ் எல்ஆர்டி நிலையம், கோலாலம்பூர், செராஸ் நகரத்திற்குள் அமைந்திருக்கவில்லை.[4]
மாறாக, இந்த நிலையம் வடக்கு சுங்கை பீசி பகுதிக்கும், தாமான் ஈக்கான் இமாஸ் - சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், செராஸ் நகரத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சாலாக் செலாத்தான்
தொகுகோலாலம்பூர் பகுதியின் அம்பாங் மற்றும் சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், தற்போது செயலிழந்த நிலையில் உள்ள மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways); மற்றும் மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu) எனும் இரு நிறுவனங்களின் தொடருந்து பாதைகளை மீண்டும் பயன்படுத்தி செராஸ் எல்ஆர்டி நிலையம் கட்டப்பட்டது.
செரி பெட்டாலிங் வழித்தடத்தின் புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் இதுவே கடைசி நிலையமாகவும் உள்ளது
வரலாறு
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்பட்டன.
இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
காட்சியகம்
தொகுஅம்பாங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "Cheras LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Cheras area, Kuala Lumpur, Malaysia. This Station was opened on July 11, 1998, along with 7 other LRT Stations in Sri Petaling Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
- ↑ Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd (in மலாய்). Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
- ↑ "Cheras LRT Station is an at-grade station of the Kuala Lumpur Light Rail Transit. It is served by the Sri Petaling-Sentul Timur branch of the Ampang Line. The station, despite its name, is located outside the Cheras township, closer to Taman Ikan Emas and Salak Selatan. It began operations on 11 July, 1998". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Cheras LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.