சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Salak Selatan LRT Station; மலாய்: Stesen LRT Salak Selatan; சீனம்: 南萨拉克) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் தாழ்ந்தமாடி அமைப்பைக் கொண்ட ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
AG13 CC25 சாலாக் செலாத்தான் | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| எல்ஆர்டி | எம்ஆர்டி Salak Selatan LRT Station | ||||||||||||||||||||||||||
சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் (2007) | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | சுங்கை பீசி சாலை, சாலாக் செலாத்தான், கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°6′7″N 101°42′22″E / 3.10194°N 101.70611°E | |||||||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா எம்ஆர்டி நிறுவனம் | |||||||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||||||||||||
தடங்கள் | செரி பெட்டாலிங் எம்ஆர்டி சுற்று | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP13 CC25 தாழ்ந்தமாடி | |||||||||||||||||||||||||
தரிப்பிடம் | - இல்லை | |||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | SP13 CC25 | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 11 சூலை 1998 (எல்ஆர்டி); 2028-2030 (எம்ஆர்டி) | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சாலாக் செலாத்தான் நகரின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் சுங்கை பீசி சாலை, இந்த நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.[3]
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் எதிர்காலப் பரிமாற்றமாக நிலையமாக இந்த நிலையம் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொது
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த சாலாக் செலாத்தான் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது.[4]
சாலாக் செலாத்தான்
தொகுகோலாலம்பூர் பகுதியின் அம்பாங் மற்றும் சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், தற்போது செயலிழந்த நிலையில் உள்ள மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways); மற்றும் மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu) எனும் இரு நிறுவனங்களின் தொடருந்து வழித்தடங்களை மீண்டும் பயன்படுத்திய பின்னர் இந்த சாலாக் செலாத்தான் இலகு தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.
அம்பாங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் அம்பாங் வழித்தடம் உருவாக்கப்பட்டது.[5]
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
580 | AG13 சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் | டேசா பெட்டாலிங் ⇌ புடு சாலை ⇌ சாலாக் செலாத்தான் நகர மையம் |
காட்சியகம்
தொகுசாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Salak Selatan LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Salak South area, Kuala Lumpur, Malaysia. This Station was opened on July 11, 1998, along with 7 other LRT Stations in Sri Petaling Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
- ↑ "Salak Selatan LRT station is a Malaysian at-grade rapid transit station situated near and named after the Kuala Lumpur township of Salak South". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
- ↑ Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd (in மலாய்). Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Salak Selatan LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Klang Valley MRT Line Integrations