செராஸ் மக்களவைத் தொகுதி
செராஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Cheras; ஆங்கிலம்: Cheras Federal Constituency; சீனம்: 蕉赖国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P123) ஆகும்.
செராஸ் (P123) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Cheras (P123) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 101,184 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | செராஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; செராஸ், புடு, புக்கிட் பிந்தாங், சுங்கை பீசி காஜாங் |
பரப்பளவு | 20 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | தான் கோக் வாய் (Tan Kok Wai) |
மக்கள் தொகை | 135,823 (2020) [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
செராஸ் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து செராஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
செராஸ்
தொகுகோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் செராஸ் நகரமும் ஒன்றாகும். செராஸ் பகுதி இரு நாடாளுமன்ற மாகளவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 1974-ஆம் ஆண்டு வரையில் செராஸ் மக்களவைத் தொகுதி; உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் இருந்தது. 1995-ஆம் ஆண்டில் செராஸ் மக்களவைத் தொகுதி என்று ஒரு புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
- செராஸ் மக்களவைத் தொகுதி
- உலு லங்காட் மக்களவைத் தொகுதி
உலு லங்காட் மாவட்டம்
தொகுமுன்பு காலத்தில் செராஸ் நகர்ப்பகுதி, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான உலு லங்காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் பகுதியில் பெரும்பாலான கல்வி நிலையங்கள்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகள் இருந்தன.
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[5] அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது. மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி இந்தத் தொகுதியில்தான் உள்ளது. 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள சிறந்த பள்ளியாக அறியப்படுகிறது.[6]
செராஸ் மக்களவைத் தொகுதி
தொகுசெராஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் சுங்கை பீசி மக்களவைத் தொகுதியில் இருந்து செராஸ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P111 | 1995–1999 | தான் கோக் வாய் (Tan Kok Wai) |
ஜனநாயக செயல் கட்சி |
10-ஆவது மக்களவை | 1999–2004 | மாற்று பாரிசான் ஜனநாயக செயல் கட்சி | ||
11-ஆவது மக்களவை | P123 | 2004–2008 | ஜனநாயக செயல் கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் ஜனநாயக செயல் கட்சி | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் ஜனநாயக செயல் கட்சி | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது |
செராஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தொகுபொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
101,184 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
72,207 | 71.40% | ▼ -9.89% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
71,746 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
161 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
300 | ||
பெரும்பான்மை (Majority) |
54,448 | 75.89% | ▼ -2.11 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8] |
செராஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
தான் கோ வாய் (Tan Kok Wai) |
பாக்காத்தான் | 71,746 | 60,294 | 84.04% | - 4.96% ▼ | |
சின் யோக் கெங் (Chin Yoke Kheng) |
பெரிக்காத்தான் | - | 5,846 | 8.15% | + 8.15% | |
சோங் இயூ சுவான் (Chong Yew Chuan) |
பாரிசான் | - | 5,606 | 7.81% | - 3.19% ▼ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "History of Cheras". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி - 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பள்ளி". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.