பண்டார் துன் உசேன் ஓன்
பண்டார் துன் உசேன் ஓன் (ஆங்கிலம்: Bandar Tun Hussein Onn; மலாய்: Bandar Tun Hussein Onn) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் செராஸ் 11-ஆவது மைலில் (Batu 11 Cheras) உள்ள புற நகரப்பகுதி ஆகும். இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 13 கிமீ தொலைவிலும் காஜாங்கிற்கு வடக்கே 7.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பண்டார் துன் உசேன் ஓன் | |
---|---|
Bandar Tun Hussein Onn | |
ஆள்கூறுகள்: 3°2′32.59″N 101°44′39.85″E / 3.0423861°N 101.7444028°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
பொதுவாகவே பண்டார் துன் உசேன் ஓன், ஒரு குடியிருப்பு பகுதி ஆகும்; 1990-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு ஒரு எம்ஆர்டி தொடருந்து நிலையம் (MRT Bandar Tun Hussein Onn) உள்ளது.[1]
பொது
தொகுபண்டார் துன் உசேன் ஓன் நகரத்தின் மேம்பாட்டாளர்கள் உடா ஓல்டிங்சு நிறுவனத்தார் (UDA Holdings Bhd) ஆகும். இந்த நிறுவனம் 1971-இல் மலேசிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டில், செராஸ் பகுதியில் 752 ஏக்கர் (304 எக்டேர்) நிலத்தை கையகப்படுத்தி பண்டார் துன் உசேன் ஓன் நகரத்தை உருவாக்கியது.[2]
தெற்கு செராஸ் பகுதியில் மிகப்பெரிய வீட்டு மனைத் திட்டமாக அறியப்படுகிறது. இங்கு 6,000 குடியிருப்பு மனைகள் உள்ளன; மொத்த மக்கள் தொகை 35,000 ஆக உள்ளது.
தொடருந்து நிலைய காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bandar Tun Hussein Onn MRT Station, located in Bandar Tun Hussein Onn, 9th-Mile Cheras (Batu 9 Cheras), Jalan Cheras. Nested within Kajang and Balakong. The Station started operation on 16 December 2016". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
- ↑ "The Urban Development Authority (UDA) was established by the government on 12 November 1971". www.uda.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bandar Tun Hussein Onn தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- BandarTunHusseinOnn.com
- Bandar Tun Hussein Onn MRT Station
- Kajang Municipal Council - administrator of Bandar Tun Hussein Onn
- https://web.archive.org/web/20170509211701/http://ww1.utusan.com.my/utusan/Ekonomi/20130708/ek_21/UDA-Holdings-bina-masjid-Bandar-Tun-Hussein-Onn
- http://www.mpkj.gov.my/ms/rakyat/perkhidmatan/kaunter-kaunter
- http://www.jknselangor.moh.gov.my/index.php/ms/carian-fasiliti/535-klinik-kesihatan/392-klinik-kesihatan-bandar-tun-hussien-onn
- http://www.kkr.gov.my/ms/node/34761
- https://www.tabunghaji.gov.my/ms/pejabat-cawangan-th/th-cheras
- https://www.propwall.my/insight/1233/lake_valley
- https://web.archive.org/web/20180502140504/http://www.uda.com.my/beginnings.php