மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Miharja LRT Station; மலாய்: Stesen LRT Miharja; சீனம்: 美和家站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் (2024) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRTMiharja 美和家站 | |||||||||||||||
அமைவிடம் | சாலை 1/93, தாமான் மிகார்ஜா, சாலை, கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°7′15″N 101°43′3″E / 3.12083°N 101.71750°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | அம்பாங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | கீழிருந்து மேலாக அடுக்கு நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | AG12 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமான் மிகார்ஜா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில் இருந்து இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் லோகே இயூ சாலை, கெராயோங் ஆற்றுப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வளாகமும் இந்த நிலையத்திற்கு அருகில்தான் உள்ளது.
பொது
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 17 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த மிகார்ஜா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.[3]
இந்த நிலையம் மலூரி எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் கொண்டுள்ளது.
அம்பாங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]
காட்சியகம்
தொகுமிகார்ஜா நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "Miharja LRT station is situated at the southwestern side of the Miharja Flats, a complex of flats close to Kerayong River in the locality of Taman Miharja, off Jalan Loke Yew". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2024.
- ↑ "Miharja LRT station is situated at the southwestern side of the Miharja Flats, a complex of flats close to Kerayong River in the locality of Taman Miharja, off Jalan Loke Yew". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2024.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Miharja LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Miharja LRT Station - mrt.com.my