மலூரி நிலையம்
மலூரி நிலையம் (ஆங்கிலம்: Maluri Station; மலாய்: Stesen Maluri; சீனம்: 馬魯里站) என்பது மலேசியா, கோலாலம்பூர் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT); மற்றும் பெரும் விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள தாமான் மலூரி (Maluri Garden) எனும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
மலூரி நிலையம் (2024) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | செராஸ் சாலை, தாமான் மலூரி கோலாலம்பூர் மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°7′23.74″N 101°43′37.06″E / 3.1232611°N 101.7269611°E | ||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா எம்ஆர்டி நிறுவனம் | ||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் காஜாங் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் எல்ஆர்டி; 1 தீவு மேடை எம்ஆர்டி | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 எல்ஆர்டி; 2 எம்ஆர்டி | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | AG13 உயர்த்தப்பட்ட நிலை; KG22 நிலத்தடி | ||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 4 | ||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG13 KG22 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 (எல்ஆர்டி); 17 சூலை 2017 (எம்ஆர்டி) | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், காஜாங் வழித்தடம், ஆகிய 2 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.
இந்த நிலையம் மலேசிய கூட்டரசு சாலை 1; மற்றும் செராஸ் சாலை (Cheras Road) ஆகிய சாலைகளின் வழிப்பகுதியில் அமைந்துள்ளது
அமைவு
தொகுபிரித்தானிய காலனித்துவக் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; இன்றைய மாலுரி நிலையத்தின் தளம், கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து அமைப்பின் புடோ உலு நிறுத்தம் (Pudoh Ulu Halt) அல்லது புடு உலு நிறுத்தம் (Pudu Ulu Halt) என அழைக்கப்பட்டது.
முன்னர் இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) என அழைக்கப்பட்ட அம்பாங் வழித்தடம் 1996-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது; மற்றும் 17 சூலை 2017 அன்று திறக்கப்பட்ட காஜாங் வழித்தடத்தின் மூலம் இந்த நிலையம் சேவையாற்றுகிறது. இந்த உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி நிலையம்; நிலையங்களுக்கு இடையிலான கட்டண ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது.
எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) வழங்கப்பட்ட பெயரிடும் உரிமையின் கீழ், மலூரி எம்ஆர்டி நிலையம் தற்போது ஏயோன்-மலூரி எம்ஆர்டி நிலையம் (AEON-Maluri MRT) என அழைக்கப்படுகிறது.[2][3]
அம்பாங் வழித்தடச் சேவை
தொகுபழைய உயர்த்தப்பட்ட மலூரி நிலையம், அம்பாங் வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது.
பழைய மலூரி நிலையம், கட்டண வாயில்கள் அமைந்துள்ள தரைநிலை மட்டத்திற்கும் மேலே உள்ளது; மற்றும் உயரமான இரண்டு பக்க மேடைகளையும் கொண்டுள்ளது. இரண்டு மேடைகளையும் தரைநிலை மட்டத்திலிருந்து படிக்கட்டுகள் மற்றும் சுழலும் படிக்கட்டுகள் வழியாக அடையலாம். முன்னதாக, சுமைதூக்கிகள் எதுவும் இல்லை. இருப்பினும், 2015-இல் அந்தக் குறைகள் தீர்க்கப்பட்டன..
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
T352 | தாமான் சர்மிலின் பெர்காசா | KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம்[4] |
T400 | தாமான் சர்மிலின் பெர்காசா | பண்டார் துன் ரசாக் |
T401 | KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம் | பண்டார் செரி பரமேசுவரி |
450 | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு முனையம்[5] |
400 | பண்டார் துன் ரசாக் – டாமாய் பெர்டானா | லெபோ புடு பேருந்து முனையம்[6] |
402 | KG22 AG13 மலூரி நிலையம் – தித்திவங்சா | பெக்கிலிலிங் பேருந்து முனையம்[7] |
காட்சியகம்
தொகுமலூரி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Seven hidden gems of the MRT" (in en). The Star. 9 July 2017. http://www.thestar.com.my/news/nation/2017/07/09/seven-hidden-gems-of-the-mrt-a-new-mrt-train-service-will-pull-in-on-july-17-signalling-the-start-of/.
- ↑ "MRT stations designed to tell the story of M'sia" (in en). The Star. 3 August 2017. http://www.thestar.com.my/metro/community/2017/08/03/learn-nations-history-from-ground-up-inspired-by-the-gombak-quartz-ridge-mrts-underground-stations-a/.
- ↑ "Maluri MRT Feeder Bus T352 | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
- ↑ "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ "Line Route 400 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
- ↑ "402 Route: Time Schedules, Stops & Maps - Hab Titiwangsa". moovitapp.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.