ஆங் துவா நிலையம்
ஆங் துவா நிலையம் அல்லது பிபிசிசி - ஆங் துவா நிலையம் (ஆங்கிலம்: BBCC-Hang Tuah Station; மலாய்: Stesen BBCC-Hang Tuah; சீனம்: 漢都亞站) என்பது மலேசியா, கோலாலம்பூர், புடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். பொதுவாக இந்த நிலையம் ஆங் துவா நிலையம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.[2]
AG9 SP9 MR4 ஆங் துவா | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| எல்ஆர்டி | எம்ஆர்டி | மோனோ BBCC-Hang Tuah Station | ||||||||||||||||||||||||||
ஆங் துவா நிலையம் (2024) | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | புக்கிட் பிந்தாங் நகர மையம், ஆங் துவா சாலை, புடு, 55200, கோலாலம்பூர் | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°8′24″N 101°42′21″E / 3.14000°N 101.70583°E | |||||||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா | |||||||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் செரி பெட்டாலிங் மோனோரெயில் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 4 பக்க மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 (எல்ஆர்டி); 2 (மோனோரெயில்) | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | AG9 SP9 நிலத்தடி MR4 உயர்த்தப்பட்ட நிலை | |||||||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 4 | |||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | |||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG9 SP9 MR4 | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 (எல்ஆர்டி); 31 ஆகத்து 2003 (மோனோரெயில்) | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், ஆகிய 3 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.[3]
2012 மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து ஆங் துவா நிலையத்தைப் பயன்படுத்தும் மூன்று தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பு முறைமை பயன்பாட்டில் உள்ளது.
அமைவு
தொகுபுக்கிட் பிந்தாங் நகர மையத்திற்கு வலதுபுறம் அமைந்துள்ள இந்த நிலையம், மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளி, விக்டோரியா கல்விக்கழகம், புக்கிட் அமான் மலேசிய காவல் துறையின் தலைமையகம் (Royal Malaysia Police Headquarters) மற்றும் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) ஆகியவற்றின் அருகிலும் அமைந்துள்ளது.
ஆங் துவா எல்ஆர்டி நிலையம் 1996-இல் உருவாக்கப்பட்டது. இதுவே கோலாலம்பூர் நகரில் திறக்கப்பட்ட முதல் 13 இஸ்டார் விரைவு போக்குவரத்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நிலையத்தின் மேல்தளம், பயணச்சீட்டுகள் வழங்கும் முகவர் பகுதியுடன் இணைக்கப்பட்ட இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. மேல்தளத்தின் வழியாக ஆங் துவா சாலைக்குச் செல்லலாம்.
வசதிகள்
தொகுஇலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.
ஆங் துவா நிலையத்தில் உள்ள இரண்டு நிலையங்களும் (எல்ஆர்டி நிலையம்; மோனோரெயில்) தனித்தனியாக இயங்குகின்றன. அவற்றுள் ஆங் துவா மோனோரயில் நிலையம் என்பது கோலாலம்பூர் மோனோரெயில் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் தனி ஒருதொடருந்து நிலையமாகும்; 31 ஆகத்து 2003 அன்று திறக்கப்பட்டது.
மற்ற எல்லா மோனோரயில் நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையில் கட்டப்பட்டுள்ளது. ஆங் துவா சாலைக்கு மேலே உள்ளது. கோலாலம்பூர் தங்க முக்கோணத்திற்குச் சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் ஆங் துவா மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும்.
ஆங் துவா நிலைய தள அமைப்பு
தொகுL1 - முதலாவது மாடி | பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் | |
மோனோரெயில் தெற்கு திசை | → → MR1 கேஎல் சென்ட்ரல் → மகாராஜாலேலா | |
மோனோரெயில் வடக்கு திசை | ← ← MR11 தித்திவங்சா நிலையம் ← இம்பி நிலையம் | |
பக்க மேடை, தொடருந்து கதவுகள் வலதுபுறத்தில் திறக்கப்படும் | ||
மோனோரெயில் | காத்திருக்கும் இடம் | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் LRT |
G - தெருநிலை | சாலைவழி | நுழைவாயில்கள், பயணச்சீட்டு தானியங்கி நிலையங்கள், கட்டண வாயில்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், மோனோரயில் கட்டண நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள், டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்கள் |
LG - நிலத்தடி நிலை எல்ஆர்டி |
பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் | |
AG/SP தெற்கு திசை | → → AG18 அம்பாங் → புடு → → SP31 புத்ரா அயிட்ஸ் → புடு | |
AG/SP வடக்கு திசை | ← ← AG1 செந்தூல் தீமோர் ← பிளாசா ராக்யாட் ← ← SP1 செந்தூல் தீமோர் ← பிளாசா ராக்யாட் | |
பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் |
காட்சியகம்
தொகுஆங் துவா நிலையக் காட்சிப் படங்கள்:
நிலையச் சுற்றுப்புறம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Hang Tuah LRT Station, also known as BBCC - Hang Tuah Station due to the new transit hub, is an interchange station in the Pudu district of Kuala Lumpur". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
- ↑ "LRT Ampang Line / Sri Petaling Line meant both stations are designated in transit maps as interchange stations". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Hang Tuah LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Hang Tuah Monorail Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.