கோலாலம்பூர் நெகாரா அரங்கம்

கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஓர் உள்விளையாட்டரங்கம்

கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (மலாய்; ஆங்கிலம்: Stadium Negara Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஓர் உள்விளையாட்டரங்கம் ஆகும்.

கோலாலம்பூர் நெகாரா அரங்கம்
Stadium Negara Kuala Lumpur
நெகாரா அரங்கத்தின் வெளிப்புறக் காட்சி (2024)
Map
முகவரிஆங் ஜெபாட் சாலை 50150
கோலாலம்பூர்  மலேசியா
பொது போக்குவரத்து
உரிமையாளர்பிஎன்பி மெர்டேக்கா வென்ச்சர்ஸ் நிறுவனம்
இருக்கை எண்ணிக்கை10,000
கட்டுமானம்
திறக்கப்பட்டதுஏப்ரல் 19, 1962 (1962-04-19)
சீரமைக்கப்பட்டது
  • 1982
  • 1985
  • 2015
கட்டுமான செலவுRM 34 மில்லியன்
திட்ட மேலாளர்இஸ்டான்லி எட்வர்ட் யூக்ஸ்
Structural engineer
  • எங் கீன் இன்
  • W.J. கம்மிங்
General contractor
  • எம்.டி.கனாவன்
  • கூன் இயூ இன்
  • எஸ். நாகேந்திரா

இந்த அரங்கம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், மெர்டேக்கா அரங்கம் (Stadium Merdeka) மற்றும் மெர்டேக்கா 118 கட்டிடம் (Merdeka 118); ஆகிய கட்டிடங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

ஏப்ரல் 19, 1962 அன்று, இந்த கோலாலம்பூர் நெகாரா அரங்கம் மலேசிய அரசர் துவாங்கு சையத் புத்ரா ஜமாலுல்லைல் (Yang di-Pertuan Agong Tuanku Syed Putra Jamalullail) அவர்களால்அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. மூடிய அரங்கமாக விளங்கும் இந்த விளையாட்டரங்கம், மலேசிய நாட்டில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தும் சின்னமாகத் திகழ்கின்றது.

பின்னணி

தொகு

இந்த அரங்கத்தின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 34 மில்லியன்; மேலும் இந்த அரங்கம் தென்கிழக்கு ஆசியாவில் சிறந்த உள்ளரங்கங்களில் ஒன்றாகக கருதப்படுகிறது.

அத்துடன், பொறியியல் துறையின் இணையற்ற எடுத்துக்காட்டாக அமைவதோடு அல்லாமல், மலேசிய நாட்டின் நவீன கட்டிடக்கலை வடிவமைப்பிற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.[1]

இந்த அரங்கம் 10,000 நிரந்தர இருக்கைகளைக் கொண்டது; மற்றும் முழுவதுமாக குளிரூட்டப்பட்டு உள்ளது. அத்துடன், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் போன்ற பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தும் திறனையும் கொண்டது.[2]

பொது

தொகு

இந்த அரங்கம் 1982, 1985, 2015-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 2003-இல், இந்த கோலாலம்பூர் தேசிய அரங்கம் தேசியப் பாரம்பரியக் கட்டிடமாக அறிவிக்கப்பட்டது.

காட்சியகம்

தொகு

கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தின் 2014-ஆம் ஆண்டு காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு