முகிபா எல்ஆர்டி நிலையம்
முகிபா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Muhibbah LRT Station; மலாய்: Stesen LRT Muhibbah; சீனம்: 轻轨穆希巴站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
SP20 முகிபா | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| எல்ஆர்டி Muhibbah LRT Station | ||||||||||||||||
முகிபா எல்ஆர்டி நிலையம் (2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 1/155 A சாலை, கம்போங் முகிபா கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°3′43.4″N 101°39′45.0″E / 3.062056°N 101.662500°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | செரி பெட்டாலிங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP20 உயர்த்திய நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | 230 கட்டணம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP20 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 31 அக்டோபர் 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
கோலாலம்பூர் கம்போங் முகிபா (Kampung Muhibbah) குடியிருப்புப் பகுதியில் உள்ளது. கம்போங் முகிபா என்பது ஒரு கிராமமாகும். கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது. முகிபா எல்ஆர்டி நிலையம், கம்போங் முகிபா மற்றும் பார்க்லேன் ஓயூஜி அடுக்குமாடி வீடுகளுக்கு (Parklane OUG Service Apartments) அருகில் 1.0 கி.மீ. நடை தூரத்தில் உள்ள நிலையமாகும்.[3][4]
பொது
தொகுமுகிபா நிலையத்திலிருந்து அடுத்த நிலையமான அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்ல முடியும். அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் மிக அருகில் உள்ள நிலையமாக அறியப்படுகிறது.[5]
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த முகிபா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
தொகுஇந்த நிலையத்திற்கு முன்னதாக SP21 ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
651 ரேபிட் கேஎல் | SP20 முகிபா எல்ஆர்டி நிலையம் ⇌ கிள்ளான் லாமா சாலை | SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ பேர்ல் பாயின்ட் (Pearl Point) |
652 ரேபிட் கேஎல் | SP20 முகிபா எல்ஆர்டி நிலையம் ⇌ கிள்ளான் லாமா சாலை | SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ பத்து 3 ½ கிள்ளான் லாமா சாலை |
GOKL 14 கோ கேஎல் | SP20 முகிபா சமூக வளாகம் ⇌ PPR பிங்கிரான் ]]புக்கிட் ஜாலில் | SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ புறநகர்க் குடியிருப்புகள் |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
அமைப்பு
தொகுL1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> AG1 SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) AG11 SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தரைநிலை | கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) கம்போங் முகிபா |
G | தெருநிலை | ஊனமுற்றோருக்கான நட்பு பாதை; இருபுறமும் தெரு நுழைவாயில்கள் |
காட்சியகம்
தொகுமுகிபா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
-
ஒருங்கிணைவு தளம்
-
ஒருங்கிணைவு தளம்
-
நுழைவாயில் A
-
நடைபாதைகள்
-
நடைபாதை 1
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Muhibbah LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Kampung Muhibbah, a village about 21 km south of Kuala Lumpur. This Station was opened on 31 October 2015". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- ↑ "New Ampang LRT line to begin operations in 2015". Astro Awani. February 27, 2014.
- ↑ "Month-long free ride at four new LRT stations - Prasarana". Astro Awani. October 28, 2015.
- ↑ "Muhibbah LRT station near Platinum OUG residence, PPR Kampung Muhibbah & Parklane OUG". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- Sharidan M. Ali (April 3, 2013). "Prasarana plans to unveil RM1.1bil property development at LRT extension". The Star.
- "Prasarana: Ampang Line LRT extension Phase 1 on track for October launch". Malay Mail. March 7, 2015.