மிட் வெளி கொமுட்டர் நிலையம்
மிட் வெளி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Mid Valley Komuter Station; மலாய்: Stesen Komuter Mid Valley) என்பது மலேசியா, கோலாலம்பூர், லெம்பா பந்தாய் (Lembah Pantai) புறநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. [1]
மிட் வெளி Mid Valley | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KB01 | கொமுட்டர் | ||||||||||||||||
மிட் வெளி கொமுட்டர் நிலையம் (2007) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | மிட் வெளி சிட்டி, லெம்பா பந்தாய் கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°7′6″N 101°40′43″E / 3.11833°N 101.67861°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||
தடங்கள் | பத்துமலை–புலாவ் செபாங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
இணைப்புக்கள் | KD01 KJ17 அப்துல்லா உக்கும் நிலையம் >>> மேம்பாலம் | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KB01 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 23 ஆகத்து 2004 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
இந்த நிலையம் RM 12.2 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, ஆகத்து 2004-இல் பொதுமக்களின் பயணங்களுக்கு திறக்கப்பட்டது. கேஎல் சிட்டி நகர மையத்திற்கு ஒரு பாதசாரி மேம்பாலம் 14 நவம்பர் 2019-இல் திறக்கப்பட்டது.
பொது
தொகுகேஎல் சிட்டி நகர மையத்திற்கான பாதசாரி மேம்பாலம் மூலமாக மிட் வெளி நிலையத்திலிருந்து KD01 KJ17 அப்துல்லா உக்கும் நிலையத்திற்குக்கு பாதசாரிகள் செல்ல முடியும். அப்துல்லா உக்கும் நிலையத்தில் இருந்து கிள்ளான் துறைமுக வழித்தடம் மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய தடங்களில் செல்லும் தொடருந்துகளை அணுகலாம்.[2][3]
2021-இல், இந்த மிட் வெளி நிலையத்தின் ஒரு பகுதி மேம்படுத்தும் பணிகளுக்காக மூடப்பட்டது. தெற்கு நோக்கி காஜாங் மற்றும் சிரம்பான் செல்லும் தொடருந்துகளுக்காக நிலையத்தின் ஒரு பகுதி மட்டுமே திறந்திருந்தது.
சிரம்பான் வழித்தடம்
தொகுசிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
ரவாங் தம்பின் இணைப்பு
தொகுஇந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The Mid Valley KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on August 2004". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
- ↑ "The Mid Valley KTM Komuter station was completed at a total cost of RM12.2 million, and opened to the public on August 2004". பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
- ↑ "KTM train station called Mid Valley Megamall which stops you right outside our doors! A great option if you're coming from or heading to KL Sentral, KLIA". www.midvalley.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mid Valley தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kuala Lumpur MRT & KTM Komuter Integrations பரணிடப்பட்டது 2014-05-12 at the வந்தவழி இயந்திரம்